Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம்; நிதி கிடைக்கவில்லையென வழக்கு ஒத்திவைப்பு!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம்; நிதி கிடைக்கவில்லையென வழக்கு ஒத்திவைப்பு!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணியை மீள ஆரம்பிக்க இதுவரை நிதி கிடைக்கவில்லை என வழக்கு மீண்டும் ஏப்ரல் 4 ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் 29.06.2023 அன்று கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கானது இன்றையதினம் (04) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது.

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இடம் பெற்ற வழக்கு விசாரணைகளில் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா, முல்லைத்தீவு மாவட்ட செயலக பிரதம கணக்காளர் மயில்வாகனம் செல்வரட்ணம், கொக்கிளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,கொக்கிளாய் பகுதி கிராம அலுவலர், சட்டத்தரணிகளான வீ.எஸ். நிறஞ்சன், கணேஸ்வரன், தனஞ்சயன், ருஜிக்கா ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்

குறித்த வழக்கின் அகழ்வு பணியினை திட்டமிட்டபடி நடாத்த நிதி கிடைக்கபெறவில்லை.என தெரிவிக்கப்பட்ட நிலையில் குறித்த வழக்கு ஏப்ரல் மாதம் 4 ம் திகதிக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியின் முதல் கட்ட அகழ்வானது 06.09.2023 அன்று ஆரம்பமாகி பதினொரு நாட்கள் நடைபெற்று 17 உடற்பாகங்கள் மீட்கப்பட்ட நிலையில் இடைநிறுத்தப்பட்டிருந்தது.

மீண்டும் அகழ்வின் இரண்டாம் கட்ட பணிகள் கடந்த 20.11.2023 அன்று ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள் நடைபெற்று 40 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் இரண்டாம் கட்ட அகழ்வுபணி இடைநிறுத்தப்பட்டிருந்தது.

அத்தோடு அகழ்வு ஆய்வு நடவடிக்கையின் இறுதி நாட்களில் மேற்கொள்ளப்பட்ட ஸ்கான் பரிசோதனை மூலம் மனித புதை குழிக்கு மேற்கு பக்கமாக இரண்டு மீற்றர் நீளத்திற்கு உடலங்கள் காணப்படுவதாக பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டிருந்தது.

அதனையடுத்து குறித்த அகழ்வுப்பணியின் மூன்றாவது கட்டம் இவ்வருடம் மார்ச் மாதம் நடைபெற திட்டமிடப்பட்டிருப்பதமையும் குறிப்பிடத்தக்கது .

தொடர்புடையசெய்திகள்

மலைப்பாம்புடன் நடனமாடிய இளம்பெண்ணுக்கு ரூ.50,000 அபராதம்!
செய்திகள்

மலைப்பாம்புடன் நடனமாடிய இளம்பெண்ணுக்கு ரூ.50,000 அபராதம்!

August 6, 2026
வளி மாசடைவால் இலங்கையில் ஆண்டுதோறும் 7,000 திடீர் மரணங்கள்!
செய்திகள்

வளி மாசடைவால் இலங்கையில் ஆண்டுதோறும் 7,000 திடீர் மரணங்கள்!

August 6, 2026
செம்மணி மனித புதைகுழி; மேலும் 8 என்புக் கூடுகள் கண்டுபிடிப்பு!
செய்திகள்

செம்மணி மனித புதைகுழி; மேலும் 8 என்புக் கூடுகள் கண்டுபிடிப்பு!

August 6, 2026
ஈட்டி எறிதலுக்கான உலக தரவரிசையில் ரூமேஷ் தரங்க முதலிடத்தில்!
செய்திகள்

ஈட்டி எறிதலுக்கான உலக தரவரிசையில் ரூமேஷ் தரங்க முதலிடத்தில்!

August 6, 2026
தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்ட நிறுவனங்களின் புதிய பட்டியலை வெளியிட்டது மத்திய வங்கி!
செய்திகள்

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்ட நிறுவனங்களின் புதிய பட்டியலை வெளியிட்டது மத்திய வங்கி!

August 6, 2026
மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தல்!
செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தல்!

August 6, 2026
Next Post
நாட்டில் சற்றுமுன்னர் மற்றுமொரு துப்பாக்கி சூடு சம்பவம்; ஒருவர் உயிரிழப்பு!

நாட்டில் சற்றுமுன்னர் மற்றுமொரு துப்பாக்கி சூடு சம்பவம்; ஒருவர் உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு