Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தரம் ஐந்து பாடசாலை மாணவி துஷ்பிரயோகம்; 14 வருடங்களின் பின்னர் 12 வருட சிறை வழங்கியது நீதிமன்றம்!

தரம் ஐந்து பாடசாலை மாணவி துஷ்பிரயோகம்; 14 வருடங்களின் பின்னர் 12 வருட சிறை வழங்கியது நீதிமன்றம்!

3 years ago
in செய்திகள்

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஒருவருக்கு 12 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து நுவரெலியா மேல் நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை (05) மாலை தீர்ப்பளித்துள்ளது.

நோட்டன்பிரிஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளவட்டன் பகுதியைச் சேர்ந்த இராஜரட்ணம் கேதீஸ்வரன் (வயது 37) என்பவருக்கு இந்த கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்ட மேல் நீதிமன்ற நீதவான் விராஜ் வீரசூரிய இத் தண்டனையை வழங்கியுள்ளார்.

கடந்த 2010 ஆண்டு ஜனவரி மாத காலப்பகுதியில் கிளவட்டன் பகுதி பாடசாலை ஒன்றில் பகுதிநேர ஆசிரியராக கடமையாற்றிய இராஜரட்ணம் கேதீஸ்வரன் என்பவர் தரம் ஐந்தில் கல்வி கற்ற சிறுமியான பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக அவர் மீது நுவரெலியா மேல் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு விசாரணை நுவரெலியா மேல் நீதிமன்றத்தில் கடந்த 14 வருடங்களாக விசாரிக்கப்பட்ட நிலையில் வழங்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் இந்த பகுதி நேர ஆசிரியர் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நிலையில் இவருக்கு 12 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட்டது.

அத்துடன் குற்றவாளியாக இனங்காணப்பட்டவர் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஐந்து இலட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் இத் தொகை வழங்காவிட்டால் மேலும் 2 வருட சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி அறிவித்தார்.

மேலும், நீதிமன்ற தண்டணை பணமாக ஐந்தாயிரம் செலுத்த உத்தரவிட்ட நீதிபதி இத்தொகையை செலுத்தாவிட்டால் மேலும் இரண்டு மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.

தொடர்புடையசெய்திகள்

சவுதி அரேபியாவில் மரண தண்டனை எதிர்கொள்ளும் இலங்கையருக்கு மன்னிப்பு கோரி முஸ்லிம் எம்.பிக்கள் கோரிக்கை!
செய்திகள்

சவுதி அரேபியாவில் மரண தண்டனை எதிர்கொள்ளும் இலங்கையருக்கு மன்னிப்பு கோரி முஸ்லிம் எம்.பிக்கள் கோரிக்கை!

September 25, 2026
நாமல் ராஜபக்ஷவுக்கு 70 மில்லியன் இலஞ்சம்; ஜானகி சிறிவர்தன ஒக்டோபர் 6 வரை விளக்கமறியலில்
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு 70 மில்லியன் இலஞ்சம்; ஜானகி சிறிவர்தன ஒக்டோபர் 6 வரை விளக்கமறியலில்

September 25, 2026
அரச நிதியில் 22 கோடி ரூபா முறைகேடு?; கோட்டாபயவின் செயலாளர் தொடர்பில் நீதிமன்றில் அதிர்ச்சித் தகவல்!
செய்திகள்

அரச நிதியில் 22 கோடி ரூபா முறைகேடு?; கோட்டாபயவின் செயலாளர் தொடர்பில் நீதிமன்றில் அதிர்ச்சித் தகவல்!

September 25, 2026
தையிட்டி விகாரை போராட்ட வழக்கு; அடுத்தகட்ட விசாரணை ஜனவரி 7ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!
செய்திகள்

தையிட்டி விகாரை போராட்ட வழக்கு; அடுத்தகட்ட விசாரணை ஜனவரி 7ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

September 25, 2026
மட்டு படுவான்கரை மக்களின் நீண்டகால குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு; கரடியனாறில் புதிய திட்டம் ஆரம்பம்!
செய்திகள்

மட்டு படுவான்கரை மக்களின் நீண்டகால குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு; கரடியனாறில் புதிய திட்டம் ஆரம்பம்!

September 25, 2026
கடலில் சிக்கிய 25 இந்தோனேசிய மீனவர்கள் இலங்கை கடற்படையால் பாதுகாப்பாக மீட்பு
செய்திகள்

கடலில் சிக்கிய 25 இந்தோனேசிய மீனவர்கள் இலங்கை கடற்படையால் பாதுகாப்பாக மீட்பு

September 25, 2026
Next Post
மட்டு வெல்லாவெளி பகுதிக்கு படையெடுத்த யானைகள்; அச்சத்தில் மக்கள்!

மட்டு வெல்லாவெளி பகுதிக்கு படையெடுத்த யானைகள்; அச்சத்தில் மக்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு