இந்த வெசாக் வாரத்தில் மக்களுடன் அதிகமாக வெளியே நடமாடுவதால் முகக் கவசம் அணிவது சிறந்தது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மீண்டும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதன் காரணமாக மக்களை மிகவும் கவனமாக இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்ள்ளார்.
முகக் கவசம் அணிவது ஒரு கட்டாய சட்டம் அல்ல, ஆனால் ஒரு கோரிக்கை என அவர் கூறியுள்ளார். சுகாதாரப் பழக்க வழக்கங்களை அனைவரும் பின்பற்றுவது மிகவும் அவசியம் என அவர் மேலும் தெரிவித்துள்ளாார்.
இதேவேளை, நேற்று முன்தினத் புதிதாக 7 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
அங்கொட IDH இல் 2 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. யட்டியந்தோட்டையில் வசிக்கும் 56 வயதுடைய பெண் ஒருவரும் மாத்தறையில் வசிக்கும் 73 வயதுடைய ஆணும் கோவிட் நோயால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.