Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பேருந்துகளின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய கொழும்பில் விசேட பரிசோதனை!

பேருந்துகளின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய கொழும்பில் விசேட பரிசோதனை!

21 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கொழும்பு பஸ்டியன் மாவத்தையில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதிப்படுத்தும் நோக்கில் பேருந்துகளின் தரம் மற்றும் சேவை நிலைமைகளை பரிசோதிக்கும் விசேட வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த பரிசோதனையின் போது பேருந்துகளில் காணப்படும் குறைபாடுகள், போக்குவரத்து விதிமீறல்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அதிகாரிகளால் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அத்துடன், குறைபாடுகள் மற்றும் விதிமீறல்கள் தொடர்பில் சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கு தேவையான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.

பேருந்துகளில் கண்டறியப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக சம்பந்தப்பட்டவர்களுக்கு 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த காலத்திற்குள் குறைபாடுகளை சரிசெய்து, வேரஹெர மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திற்கு சென்று வருமான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பேருந்துகளில் இருந்து வெளியேறும் புகையின் அளவு தொடர்பான பரிசோதனையும் இடம்பெற்றதுடன், பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதிக்கு ஏற்ற வகையில் பேருந்துகள் உரிய நிலையில் உள்ளனவா என்பதும் அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டது.

இந்த வேலைத்திட்டத்தின் தொடர்ச்சியாக, பேருந்துகளின் தரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பரிசோதனைகள் மேலும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்து, பரிசோதனை வேலைத்திட்டத்தின் நோக்கம் மற்றும் அதன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் விளக்கமளித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கடந்த ஐந்து ஆண்டுகளில் பாடசாலைகளை விட்டு 2 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இடைவிலகல்
செய்திகள்

கடந்த ஐந்து ஆண்டுகளில் பாடசாலைகளை விட்டு 2 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இடைவிலகல்

September 4, 2026
நாட்டில் வறட்சியால் 96,000க்கும் அதிகமானோர் பாதிப்பு!
செய்திகள்

நாட்டில் வறட்சியால் 96,000க்கும் அதிகமானோர் பாதிப்பு!

September 4, 2026
செங்கலடி பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராட்டம் முன்னெடுப்பு
காணொளிகள்

செங்கலடி பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராட்டம் முன்னெடுப்பு

September 4, 2026
கண்டி சிறுவர் இல்லத்தில் 16 வயது சிறுவன் சித்திரவதை; நிர்வாகியும் கணவரும் கைது!
செய்திகள்

கண்டி சிறுவர் இல்லத்தில் 16 வயது சிறுவன் சித்திரவதை; நிர்வாகியும் கணவரும் கைது!

September 4, 2026
நாமல் ராஜபக்ஷவின் கைது அச்சம் நியாயமானதே; அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவின் கைது அச்சம் நியாயமானதே; அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ

September 4, 2026
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!
செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

September 4, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு