மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்திபெற்ற பாடசாலையில் ஒன்றான மட்/வின்சன்ட் தேசிய உயர்தர மகளிர் பாடசாலையில் இன்று 02.05.2023 பதட்டமான சூழல் ஒன்று ஏற்பட்டிருந்ததாக அறியமுடிகிறது.
மட்/வின்சன்ட் மகளிர் பாடசாலைக்கு இடமாற்றப்பட்டு புதிய நியமனம் பெற்றுவந்த ஆசிரியர் திரு.பொ.உதயரூபன்.மட்டக்களப்பு மாவட்ட ஆசிரிய தொழிற்சங்க செயலாளரான உதயரூபனின் நியமனத்தை ரத்து செய்யக்கோரி பாடசாலையினுள் மாணவிகளும்,பெற்றோர்களும் ஒன்று கூடி எதிர்ப்பை வெளியிட்டுருந்தனர்.
இந்த நியமனம் குறித்து அதிபரிடம் பெற்றோர்கள் வினவிய போதிலும் முறையான பதில்கள் கிடைக்கப்பெறவில்லையென பெற்றோர்கள் விசனம் தெரிவித்திருந்தனர்.
திரு.பொ.உதயரூபனுக்கு கடந்த காலங்களில் பாடசாலைகளினாலும் சக ஆசிரியர்களினாலும் சில மாணவ, மாணவிகளினாலும் ஒழுக்கரீதியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்ததுடன்., தேசிய கணக்காய்வு அத்தியட்சகரினால் குற்றப்பத்திரமும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.இதே போல கடந்த 04.04.2023 அன்று கல்குடா வலய கல்வி அலுவலக பிரிவில் உள்ள வாழைச்சேனை இந்துக் கல்லூரி தேசிய பாடசாலைக்கு .பொ.உதயரூபன் ஆசிரியராக புதிய நியமனம் பெற்று சென்ற வேளையிலும் அவரின் நியமனத்தை தற்காலிகமாக ரத்து செய்யுமாறு வலியுறுத்தி பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்க நிர்வாகத்தினரால் பாடசாலை முன்றலில் ஒரு போராட்டம் நடாத்தப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
ஆசியர் சங்க செயலாளராக காணப்படுவதனாலும், பின்புலங்களில் அரசியல் வாதிகளின் பக்கபலம் உள்ளபடியாலும் இவர் தொடர்பில் இதுவரை எந்தநடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்த பெற்றோர்கள் உடனடியாக கல்வித்திணைக்களம் இதுதொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.