கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட விஞ்ஞான வினா-விடைப்போட்டியில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவர்கள் இருவருக்கு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.
கிழக்கு மாகாணக் கல்வித்திணைகளத்தினால் மாகாணத்திலுள்ள 17 கல்வி வலயங்களுக்கிடையிலும் உள்ள மாணவர்களுக்கிடையில் விஞ்ஞானக்கல்வியை ஊக்குவித்தல் எனும் திட்டத்தின்மூலம் மும்மொழியிலும் விஞ்ஞான வினா விடைப்போட்டியை கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் அகிலா கனகசூரியம் தலைமையில் மட்டக்களப்பு கிரான் மத்திய கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை (30)நடாத்தியது. தரம்-6 தொடக்கம் 11 வரையுள்ள மாணவர்களுக்கு நாடாத்தப்பட்ட போட்டியில் மட்டக்களப்பு மெதடிஸ்தமத்திய கல்லூரியைச் சேர்ந்த ந.விஷால்,உ.துவாரகேஸ்,ஆகிய இருமாணவர்களும் பங்குபற்றி முதலாம் இடத்தைப்பெற்று தங்கப்பதக்கத்தைபெற்றுள்ளார்கள்.மேலும் இப்போட்டியில் கல்லூரியைச் சேர்ந்த 8 மாணவர்கள் பங்குபற்றி வெ ண்கலம்,வெள்ளிப்பதக்கங்களையும் பெற்றுள்ளார்கள்.
இப்பாடசாலையை சேர்ந்த10 மாணவர்களுக்கு பதக்கம் அணிவித்து நற்சான்றீதழ்களும் மாகாணக்கல்வி பணிப்பாளரினால் வழங்கி வைக்கப்பட்டது.இப்போட்டிக்கான வழிகாட்டல்களையும், ஆலோசனைகளையும் கல்லூரியின் அதிபர்இராசதுரை பாஸ்கர் மற்றும் விஞ்ஞானப்பாட ஆசிரியர்களான திருமதி.கௌசல்யா வினாயகமூர்த்தி,திருமதி.கிருஸ்ணா தேவகுமார்,தர்மினி துழசிதாசன், இரா.வரதராஜா,பீ.யோகானந்தன் ஆகியோர்கள் வழங்கி போட்டியில் வெற்றிபெறச் செய்துள்ளதுடன் பாடசாலைக்கும், பெற்றோர்களுக்கும் பெருமையை ஈட்டித்தந்துள்ளார்கள்.