Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு அரசடி சந்தியில் கிழக்கு பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் போராட்டம்!

மட்டு அரசடி சந்தியில் கிழக்கு பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் போராட்டம்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்வி சாரா ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்ததான கண்டன ஆர்ப்பாட்டம், இன்று (19) காலை அரசடியில் அமைந்துள்ள கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட கட்டடத்திற்கு முன்பாக இடம்பெற்றது.

அனைத்து பல்கலைக்கழக ஊழியர்களின் சம்மேளனம் அதனோடு இணைந்த சங்கங்களும் இணைந்து நடாத்திய இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிருவகத்தின் ஊழியர்களும் மருத்துவ பீட மற்றும் கலை பீட பல்கலைக்கழக ஊழியர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

பயனுள்ள ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்து, கல்வி சாரா ஊழியர்களின் பதவி உயர்வு மற்றும் ஆட்சேர்ப்பு முறைமையை சீர்செய், மாதாந்த இழப்பீட்டுத் தொகையை 75 வீதமாக அதிகரி, சம்பள பிரச்சனைகளுக்கு தீர்வும் இல்லை போன்ற கோஷங்களையும் பதாகைகளையும் எந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டமானது வாராந்த போராட்டமாக உருவெடுத்துள்ளதாகவும், ஒவ்வொரு வாரமும் இந்த போராட்டத்தினை அரசுக்கு எதிராக முன்னெடுக்க இருப்பதாகவும் அது எப்போது எந்த நேரத்தில் நடைபெறும் என்பதனை இறுதி நேரத்திலே நிர்வாகத்திற்கு தெரிவிப்போம் எனவும் சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

எட்டு வருடங்களாக கேட்டு வருகின்ற 17 வீத சம்பள முரண்பாட்டினுடைய எச்சத்தினை இந்த அரசாங்கம் ஏமாற்றி வருகின்றது. இன்று இந்த போராட்டத்தினால் அப்பாவி மாணவர்கள் தங்களுடைய இறுதி பரீட்சைகள் அனைத்தும் நடைபெற முடியாத ஒரு துர்பாக்கிய நிலையில் இருக்கின்றார்கள்.

இதற்குக் காரணம் எங்களது சங்கமோ அல்லது எங்களுடைய சம்மேளனமோ இல்லை இதற்கு பொறுப்பை ஏற்க வேண்டியவர்கள் கல்வி அமைச்சும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுமே.

இந்த பிரச்சனைக்கு தீர்வினை தரக்கூடிய உயர் அதிகாரிகள். இன்னமும் எங்களுடைய கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் இருப்பது எங்களுக்கு மன வேதனை அளிக்கிறது.

எங்களுடைய சம்மைளனம் மிக உறுதியாக இருக்கின்றது எங்களுடைய கோரிக்கைகளை வென்றெடுக்கும் வரை போராட்ட வடிவங்கள் மாறினாலும் போராட்டம் தொடரும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மேலும் தெரிவித்தனர்.

தொடர்புடையசெய்திகள்

உயர் கல்வித் தகுதி பெற்ற இளைஞர்களின் வேலையின்மை; ஆசியாவில் இலங்கை முதலிடம்!
செய்திகள்

உயர் கல்வித் தகுதி பெற்ற இளைஞர்களின் வேலையின்மை; ஆசியாவில் இலங்கை முதலிடம்!

September 21, 2026
அனோஜனின் பெற்றோரை சந்தித்தார் சஜித் – விடுதலைக்கு உதவவும் உறுதி!
செய்திகள்

அனோஜனின் பெற்றோரை சந்தித்தார் சஜித் – விடுதலைக்கு உதவவும் உறுதி!

September 21, 2026
புற்றுநோயாளிகளுக்கான அத்தியாவசிய தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு; ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை!
செய்திகள்

புற்றுநோயாளிகளுக்கான அத்தியாவசிய தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு; ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை!

September 21, 2026
சவூதியில் மரண தண்டனை பெற்ற அனோஜனின் குடும்பத்தினர் சவூதி தூதரகத்துக்கு விஜயம்!
செய்திகள்

சவூதியில் மரண தண்டனை பெற்ற அனோஜனின் குடும்பத்தினர் சவூதி தூதரகத்துக்கு விஜயம்!

September 21, 2026
மன்னார் கடலில் எரிபொருள் இன்றி மிதந்த மீன்பிடிப் படகு; இரு மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு
செய்திகள்

மன்னார் கடலில் எரிபொருள் இன்றி மிதந்த மீன்பிடிப் படகு; இரு மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு

September 21, 2026
2008 திருகோணமலை பெண்கள் கடத்தல் விவகாரம்; இரு முன்னாள் கடற்படை வீராங்கனைகள் கைது!
செய்திகள்

2008 திருகோணமலை பெண்கள் கடத்தல் விவகாரம்; இரு முன்னாள் கடற்படை வீராங்கனைகள் கைது!

September 21, 2026
Next Post
தகாத உறவினால் பிறந்த குழந்தையை கொலை செய்த தாய்!

தகாத உறவினால் பிறந்த குழந்தையை கொலை செய்த தாய்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு