Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நுவரெலியாவில் சீரற்ற காலநிலை; 8,191 பேர் பாதிப்பு; 6 பேர் உயிரிழப்பு!

நுவரெலியாவில் சீரற்ற காலநிலை; 8,191 பேர் பாதிப்பு; 6 பேர் உயிரிழப்பு!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 2,112 குடும்பங்களைச் சேர்ந்த 8,191 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் துஷாரி தென்னக்கூன் தெரிவித்துள்ளார்.

நேற்று (06) பிற்பகல் வரையான நிலவரப்படி, ஏற்பட்ட அனர்த்தங்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 3 பேர் காயமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, 152 குடும்பங்களைச் சேர்ந்த 504 பேர் 18 தற்காலிக பாதுகாப்பு முகாம்களில் தொடர்ந்து தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை மற்றும் பலத்த காற்றினால் மாவட்டத்தில் 11 வீடுகள் முழுமையாகவும், 246 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரண உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் மாவட்டத்தில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகின்றது. மவுசாக்கலை நீர்த்தேக்கம் கொள்ளளவை எட்டியுள்ளதுடன், காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமும் அதிகரித்து வருகிறது.

மேலும், கென்யோன், புரொட்லேன்ட், லக்சபான, பொல்பிட்டிய, நவலக்சபான, கலுகல, விமலசுரேந்திர மற்றும் மேல் கொத்மலை உள்ளிட்ட நீர்த்தேக்கங்களில் நீர் நிரம்பி, மதகுகள் ஊடாக வெளியேறி வருகின்றது.

இதனால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் காலநிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்படும் பட்சத்தில் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்படக்கூடும் என்பதால், தொடர்ந்து அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் சட்டவிரோதமாக T-56 துப்பாக்கி வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை!
செய்திகள்

மட்டக்களப்பில் சட்டவிரோதமாக T-56 துப்பாக்கி வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை!

September 21, 2026
உயர் கல்வித் தகுதி பெற்ற இளைஞர்களின் வேலையின்மை; ஆசியாவில் இலங்கை முதலிடம்!
செய்திகள்

உயர் கல்வித் தகுதி பெற்ற இளைஞர்களின் வேலையின்மை; ஆசியாவில் இலங்கை முதலிடம்!

September 21, 2026
அனோஜனின் பெற்றோரை சந்தித்தார் சஜித் – விடுதலைக்கு உதவவும் உறுதி!
செய்திகள்

அனோஜனின் பெற்றோரை சந்தித்தார் சஜித் – விடுதலைக்கு உதவவும் உறுதி!

September 21, 2026
புற்றுநோயாளிகளுக்கான அத்தியாவசிய தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு; ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை!
செய்திகள்

புற்றுநோயாளிகளுக்கான அத்தியாவசிய தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு; ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை!

September 21, 2026
சவூதியில் மரண தண்டனை பெற்ற அனோஜனின் குடும்பத்தினர் சவூதி தூதரகத்துக்கு விஜயம்!
செய்திகள்

சவூதியில் மரண தண்டனை பெற்ற அனோஜனின் குடும்பத்தினர் சவூதி தூதரகத்துக்கு விஜயம்!

September 21, 2026
மன்னார் கடலில் எரிபொருள் இன்றி மிதந்த மீன்பிடிப் படகு; இரு மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு
செய்திகள்

மன்னார் கடலில் எரிபொருள் இன்றி மிதந்த மீன்பிடிப் படகு; இரு மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு

September 21, 2026
Next Post
களுத்துறையில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; 14 பேர் காயம்!

களுத்துறையில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; 14 பேர் காயம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு