நீர்கொழும்பு, தளுபொத – பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது, கைதிகள் சிலர் சிறைச்சாலையின் கூரையின் மீது ஏறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் நிலைமையைத் தொடர்ந்து, அங்கிருந்த சில கைதிகள் பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.







