இலங்கையிலுள்ள 18 தொழிற்சங்கங்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் நாடு தழுவிய ரீதியில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
நேற்றைய தினம் (22) நிர்வாகப் பரீட்சை திணைக்களத்தின் நிறைவேற்று அதிகாரி தொழிற்சங்கத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரச நிர்வாக அதிகாரிகளின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் சாதகமான பதிலினை அளிக்காத காரணத்தினாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் பிரதமருடனான கலந்துரையாடலின் போது, நிறைவேற்று அதிகாரிகள் தம்மைப் பாதித்துள்ள பொருளாதார நெருக்கடிகள் மற்றும் தொழில்சார் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி எதிர்வரும், மார்ச் மாதம் 31ஆம் திகதி அரச நிர்வாக அதிகாரிகளின் கோரிக்கைகளுக்கு அமைச்சரவையில் உரிய தீர்வுகள் சமர்ப்பிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.
அந்த கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்படவில்லை என்றால் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரசாங்க நிறைவேற்று அதிகாரிகளின் குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, கல்வி நிர்வாக சேவைகள் தொழிற்சங்கம், தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப தொழிற்சங்கம், கணக்காளர் தொழிற்சங்கம், பரீட்சை திணைக்கள தொழிற்சங்கம் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் பங்களிப்புடன் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.