குருநாகல் – அலவ்வ பிரதேசத்தில் உள்ள மா ஓயாவில் நீராடச் சென்ற நான்கு பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், ஒரு மாணவர் நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் உள்ள ஆற்றில் குளிப்பதற்காக மாணவர்கள் ஐவரும் சென்ற நிலையில் விபத்திற்குள்ளானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பொல்கஹவெல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாறு விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.