நேற்று முன்தினம் கிரான் உள்வீதியால் எமது battinaatham ஊடகம் களவிஜயம் மேற்கொண்டிருந்த போது மட்டக்களப்பு,கிரான்,பொண்டுகள் சேனைக்கு செல்லும் பாலம் நீரினால் மூழ்கி காணப்பட்டதுடன் அந்த ஆபத்தான வீதியினூடாக பொது மக்களும் பல சிரமங்களை எதிர் கொண்டு தங்கள் போக்குவரத்தை மேற்கொள்ளவத்தை பார்க்கக்கூடியதாக இருந்தது.
அருகில் உள்ள இராணுவத்தினரை அணுகி மேலும் விபரங்களை கேட்டறிந்த போது மூன்று நாட்கள் பெய்த மழையினாலே இந்த வீதி நீரால் மூழ்கி ஓடுகின்றது என்று தெரிவித்திருந்தனர்.
ஓட்டமாவடி வழியாகவும் பொண்டுகள் சேனைக்கு செல்லமுடியும் என்றாலும் கிரான் மக்கள் ஓட்டமாவடி சென்று பொண்டுகள் சேனைக்கு செல்வதென்பது நெடுந்தூரப் பிரயாணம் அதனால் கிரான் வழியாக தங்கள் பிராயணக்களை மழை காலங்களில் மேற்கொள்ளும் பொதுமக்கள் பெரும் கஷ்டங்களுக்கு முன்னிலையில் இந்த பாலத்தை கடந்து செல்வதை காணமுடிந்தது.
மூன்று நாட்கள் பெய்த மழையை விட மாரி காலங்களில் பாலம் முற்றாக மூடிவிடும் நிலை அன்று தொட்டு காணப்படுவதால் இது குறித்து அரசியல் வாதிகள் என்ன நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள் என்பது பெரும் கேள்விகளை எழுப்புகின்றது.