Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணியை மீள ஆரம்பிப்பது தொடர்பான வழக்கு விசாரணை அடுத்த மாதம் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இன்று(04) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியின் முதல் கட்ட அகழ்வானது கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் ஆறாம் திகதி ஆரம்பமாகி 11 நாட்கள் நடைபெற்ற நிலையில் 17 உடற்பாகங்கள் மீட்கப்பட்டன.

இதனை தொடர்ந்து தற்காலிகமான இடைநிறுத்தப்பட்ட அகழ்வுப்பணிகள் மீண்டும் நவம்பர் மாதம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள் நடைபெற்ற இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளில் மொத்தமாக 40 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டது.

இந்த அகழ்வு ஆய்வு நடவடிக்கையின் இறுதி நாட்களில் மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன்

எனப்படும் வருடி பரிசோதனை மூலம் மனித புதை குழிக்கு மேற்கு பக்கமாக இரண்டு மீற்றர் நீளத்திற்கு உடலங்கங்கள் காணப்படுவதாக கண்டறியப்பட்டிருந்தது.

இதனையடுத்து குறித்த அகழ்வுப்பணி கடந்த மாதம் நடைபெற திட்டமிடப்பட்டிருந்த நிலையில் நிதி கிடைக்கப்பறாமையினால் இன்றைய தினத்திற்கு தவணையிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் கொக்குதொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வுப்பணிகள் தொடர்பான வழக்கு இன்று(04) முல்லைத்தீவு நீதவான் நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின் போது அகழ்வு பணியினை நடாத்த இன்னும் நிதி கிடைக்கபெறவில்லை என முல்லைத்தீவு மாவட்ட செயலக பிரதம கணக்காளர் மயில்வாகனம் செல்வரட்ணம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போது அகழ்வுப் பணிக்கென போடப்பட்டுள்ள பாதீடு அதிகமாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் நீதிமன்றில் கூறியுள்ளார்.


இதனால் பாதீட்டை சீர்செய்து அனுப்பி நிதியினை பெற்றுக் கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கையில் ஈடுபட்ட தொல்லியல் திணைக்கள பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் வழக்கு விசாரணையின் போது நீதிமன்றில் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட எச்சங்கள் 1994 ஆம் ஆண்டு தொடக்கம் 1996 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குரியவை என குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இதையடுத்து குறித்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 16 ஆம் திகதிக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் ஒத்திவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு
செய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு

September 17, 2026
சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது
செய்திகள்

சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது

September 17, 2026
கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை

September 17, 2026
வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி
செய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி

September 17, 2026
சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்
செய்திகள்

சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்

September 17, 2026
இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு
செய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு

September 17, 2026
Next Post
இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள்!

இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.