Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
டெல்லியில் மது அருந்தி வாகனம் ஓட்டுவோர் எண்ணிக்கை 22% அதிகரிப்பு !

டெல்லியில் மது அருந்தி வாகனம் ஓட்டுவோர் எண்ணிக்கை 22% அதிகரிப்பு !

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

இந்திய , டெல்லியில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோரின் எண்ணிக்கை 22% அதிகரித்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் கடந்த ஜனவரி 1 முதல் மார்ச் 31-ம் திகதி வரை பொலிஸார் நடத்திய வாகன சோதனைகளில் 6,591 பேர் குடிபோதையில் வாகனத்தை இயக்கியது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டில் 5,384 என்ற எண்ணிக்கையிலும் 2022ம் ஆண்டில் 399 என்ற எண்ணிக்கையாகவும் இருந்தது. இந்நிலையில் தற்போது குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் அதிகமாக உள்ள பகுதியில் மேற்கு டெல்லியின் ரஜவுரி கார்டன் முதலிடத்தில் உள்ளது. அப்பகுதியில் கடந்த 3 மாதங்களில் மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 333 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து சமய்பூர் பத்லி, 252 வழக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது கவலையளிப்பதாக சாலை பாதுகாப்பு தன்னார்வலர்கள் தெரிவித்தனர்.

குடிபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் பிரின்ஸ் சிங்கால் என்பவர் இதுகுறித்து கூறுகையில், ”மது விற்பனை அதிகரித்து வருவதால், குடிபோதையில் வாகனம் ஓட்டுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 22% என்பது ஒரு மோசமான அதிகரிப்பு. குடிபோதையில் வாகனம் ஓட்டுவது ஒரு அன்றாட நிகழ்வாகிவிட்டது. இதை தவிர்க்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

மோட்டார் வாகனச் சட்டம் 1988, பிரிவு 185ன் படி, 100 மில்லி ரத்தத்தில் 30 கிராமுக்கு மேல் மதுபான தன்மை கலந்திருக்கும் நபர் வாகனம் ஓட்டுவது கண்டறியப்பட்டால், அவருக்கு அபராதம் மற்றும் சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு மாநகரசபை – காத்தான்குடி நகரசபை இடையே ஏற்பட்ட முறுகல் காத்தான்குடி பொலிஸாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது!
செய்திகள்

மட்டக்களப்பு மாநகரசபை – காத்தான்குடி நகரசபை இடையே ஏற்பட்ட முறுகல் காத்தான்குடி பொலிஸாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது!

September 23, 2026
பிரதமருக்கும் IMF பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் சந்திப்பு!
செய்திகள்

பிரதமருக்கும் IMF பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் சந்திப்பு!

September 23, 2026
ஈரானை முற்றிலும் அழித்துவிடுவதாக ட்ரம்ப் எச்சரிக்கை!
செய்திகள்

ஈரானை முற்றிலும் அழித்துவிடுவதாக ட்ரம்ப் எச்சரிக்கை!

September 23, 2026
போதைப்பொருள் கடத்தல் சந்தேகம்; ரூ.4.75 கோடி சொத்துக்கள் முடக்கம்!
செய்திகள்

போதைப்பொருள் கடத்தல் சந்தேகம்; ரூ.4.75 கோடி சொத்துக்கள் முடக்கம்!

September 23, 2026
பொதியிடப்படாத தேங்காய் எண்ணெய் விற்பனைக்கு தடை?
செய்திகள்

பொதியிடப்படாத தேங்காய் எண்ணெய் விற்பனைக்கு தடை?

September 23, 2026
ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் 15 பேருக்கு நீண்டகால சிறைத்தண்டனை!
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் 15 பேருக்கு நீண்டகால சிறைத்தண்டனை!

September 23, 2026
Next Post
சுகாதார ஊழியர்கள் மீது தலைக்கவசத்தால் தாக்குதல் !

சுகாதார ஊழியர்கள் மீது தலைக்கவசத்தால் தாக்குதல் !

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு