Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாட்டு மக்களின் கைகளிலே அனைத்தும் உள்ளது; வாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டும் என்கிறார் சாணக்கியன் !

நாட்டு மக்களின் கைகளிலே அனைத்தும் உள்ளது; வாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டும் என்கிறார் சாணக்கியன் !

2 years ago
in அரசியல், செய்திகள், மட்டு செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றால் இந்த நாட்டின் ஜனாதிபதியை தீர்மானிப்பவர்களாக தமிழர்கள் இருக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

வடமாகாணத்தில் கிளிநொச்சி என்னும் இடத்திற்குள்ளேயே செல்லமுடியாத அமைச்சர் ஒருவரின் ஆதரவினை கொண்டு ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெறுவார் என நினைத்தால் அது ஒரு சவாலான விடயம் எனவும் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் நேற்று மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்,
ஐக்கிய மக்கள் சக்தி சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ளது, தேசிய மக்கள் சக்தி அனுரகுமார திசாநாயகப்பினை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ளது. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எந்த கட்சியில் போட்டியிடப்போகின்றார், கூட்டமைப்பினை எவ்வாறு அமைக்கப்போகின்றார் என்பதே தற்போதுள்ள பிரச்சினை.

இன்று மொட்டு கட்சியும் பிரிந்த நிலையில் உள்ளது. மொட்டுக்கட்சி உருவாக்கப்பட்டது ராஜபக்ஸக்களின் எதிர்காலத்திற்காகும். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொறுப்புகள் அனைத்தும் மகிந்த ராஜபக்ஸவிடம் இருந்த நேரத்தில் அதனை மைத்திரிபால சிறிசேனவிடம் வழங்கிவிட்டு மொட்டுக் கட்சியை ஆரம்பித்தனர். அது சிறிலங்கா பொதுஜன பெரமுன என்பதை விட சிறிலங்கா ராஜபக்ஸ பெரமுன என்று அக்கட்சிக்கு பெயரை வைத்திருக்கலாம்.இன்று அந்த கட்சி குழப்பநிலையில் உள்ளது.அந்த கட்சியில் உள்ள ஒரு சிலரை ஜனாதிபதி ரணில் அவர்கள் இலஞ்சமான அமைச்சு பதவிகளை வழங்கி அதில் சிலர் அமைச்சர்கள் பாரிய மோசடிகளில் ஈடுபட்டு இன்று ரணில் விசுவாசிகளாக மாறியுள்ளனர்.

இந்த நிலையில் இந்த மொட்டுக்கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டிருக்கின்றது. இன்று நாமல்ராஜபக்ஸ தனது தந்தையினைப் போன்று கும்பிடு போட்டுக் கொண்டு விகாரைகள் எல்லாம் சுற்றிதிரிகின்றார்.இவர்கள் விகாரைகளை சுற்றித் திரிவதே ஒரு ஆபத்தான நிலைமை. இந்த நாட்டுக்கு.அதேநேரம் மொட்டுக்கட்சின் பிரதான உறுப்பினரும் பசில் ராஜபக்ஸவின் வலதுகையுமான பிரசன்ன ரணதுங்க நாமல்ராஜபக்ஸவை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தால் மொட்டு பிளவுபடும் என்று சொல்கின்றார். இன்று அவர்களுக்குள்ளே குழப்பம் இருக்கின்றது.

எதிர்வரும் காலத்தில் தேர்தல் ஒன்று நடந்தால் அந்த சந்தர்ப்பத்தினை மக்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஐந்து வருடத்திற்கு ஒரு முறை வரும் சந்தர்ப்பத்தினை மக்கள் சரியாக பயன்படுத்தாமல் விட்டால் அடுத்த ஐந்து வருடத்திற்கு எமது எதிர்காலம் மிக மோசமான எதிர்காலமாகவே இருக்கும். ஐந்து வருடங்களுக்கு முன்பாக கோட்டபாயவினை ஆதரித்த மக்களும் இந்த மாவட்டத்தில் இருக்கின்றார்கள்.

மக்கள் எதிர்நோக்கிய பாரிய பிரச்சினைகளுக்கு அந்த மக்கள் அன்று வழங்கிய வாக்குகளும் காரணமாகும்.
ஈபிடிபி கட்சியின் செயலாளர் நாயகம் கிளிநொச்சியில் விரட்டியடிக்கப்படுகின்றார். மூன்று வாகனங்களில் வந்தவர் மோட்டார் சைக்கிளில் தப்பியோடும் நிலைக்கு வந்துள்ளார். அதே கட்சியை சேர்ந்தவர்களின் சில அல்லக்கைகள் ஊடக சந்திப்புகளை செய்து ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவிக்கின்றனர். கிளிநொச்சியில் உள்ள ஒரு கிராமத்திற்குள்ளேயே செல்ல முடியாத ஒரு அமைச்சரை வைத்துக்கொண்டு ரணில்விக்ரமசிங்க வெற்றிபெறும் நோக்கிமிருந்தால் அது சவாலன விடயமாகவே வரும்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்ந்து எமது கட்சி இதுவரையில் எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை. கட்சியாக கலந்துரையாடி ஒரு தீர்மானத்தை நாங்கள் எடுப்போம். எந்த தீர்மானமாகயிருந்தாலும் தமிழ் மக்கள் தான் இம்முறை இந்த நாட்டில் யார் ஜனாதிபதி என்பதை தீர்மானிக்கவேண்டும்.இன்று மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் இலங்கை தமிழரசுக்கட்சியை தவிர ஏனைய கட்சிகளுக்கு பின்னால் மக்கள் நிற்பது தெரியவில்லை.

மிகவிரைவில் இந்த நாட்டில் ஆட்சிமாற்றம் வரும் போது ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பின்புலமாகயிருந்து செயற்பட்டவர்களை சர்வதேச ஊடகம் ஒன்று வெளிப்படுத்தியிருந்தது. இதுவரையில் விசாரணையொன்று இல்லை. ஆட்சி மாற்றம் ஒன்று வரும் போது இது தொடர்பான விசாரணை நடைபெற்று சிறைச்சாலையில் அதிதியாக இருக்கலாம். தேர்தல் காலங்களில் மக்கள் சரியான தீர்மானங்களை எடுக்கவேண்டும்.

தொடர்புடையசெய்திகள்

2008 திருகோணமலை பெண்கள் கடத்தல் விவகாரம்; இரு முன்னாள் கடற்படை வீராங்கனைகள் கைது!
செய்திகள்

2008 திருகோணமலை பெண்கள் கடத்தல் விவகாரம்; இரு முன்னாள் கடற்படை வீராங்கனைகள் கைது!

September 21, 2026
நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தித் திறைசேரியை நிரப்பியுள்ளோம் – எதிர்வரும் பட்ஜெட்டில் மக்களுக்கு சுமை ஏற்பட்டுள்ள வரிகளை நீக்குவோம் ; ஜனாதிபதி
செய்திகள்

நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தித் திறைசேரியை நிரப்பியுள்ளோம் – எதிர்வரும் பட்ஜெட்டில் மக்களுக்கு சுமை ஏற்பட்டுள்ள வரிகளை நீக்குவோம் ; ஜனாதிபதி

September 21, 2026
மோசமான வானிலை காரணமாக நுவரெலியா, ஹட்டன் வலயங்களில் 13 பாடசாலைகளுக்கு விடுமுறை!
செய்திகள்

மோசமான வானிலை காரணமாக நுவரெலியா, ஹட்டன் வலயங்களில் 13 பாடசாலைகளுக்கு விடுமுறை!

September 21, 2026
அரச சேவைக்கு 120,000 பேர் ஆட்சேர்ப்பு; ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு!
செய்திகள்

அரச சேவைக்கு 120,000 பேர் ஆட்சேர்ப்பு; ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு!

September 21, 2026
அத்துருகிரிய இரட்டைக் கொலை; துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட 4 பேர் கைது!
செய்திகள்

அத்துருகிரிய இரட்டைக் கொலை; துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட 4 பேர் கைது!

September 21, 2026
நீதிமன்றில் ஆஜராகாத விமல் வீரவன்ச; பிடியாணை பிறப்பிப்பு!
செய்திகள்

நீதிமன்றில் ஆஜராகாத விமல் வீரவன்ச; பிடியாணை பிறப்பிப்பு!

September 21, 2026
Next Post
விகாரைக்குள் நுழைந்த முன்னாள் இராணுவ வீரர் அடித்து கொலை; தேரர் கைது !

விகாரைக்குள் நுழைந்த முன்னாள் இராணுவ வீரர் அடித்து கொலை; தேரர் கைது !

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.