ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவர் சிறைச்சாலை அதிகாரிகளின் பிடியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக ஹம்பாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
தப்பியோடியவர் அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் திருட்டு வழக்கு ஒன்று தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டவர் எனவும் லுனுகம்வெஹர பகுதியில் வசிப்பவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர் .
தப்பியோடிய நபரைக் கைது செய்வதற்காக அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலை அதிகாரிகள் ஹம்பாந்தோட்டை மற்றும் லுனுகம்வெஹர பொலிஸாருடன் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.