அக்குறணை, குடுகலை பகுதியில் அமைந்துள்ள வாகன உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் இன்று (04) காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்தத் தீ விபத்தினால் குறித்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன், பிரதான வீதியூடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தீ விபத்தில் எவருக்கும் காயங்களோ உயிரிழப்புகளோ ஏற்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
இச்சம்பவம் தொடர்பில் கடுகஸ்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.








