Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சொகுசு வாகன நிதி மூல விசாரணையில் பெண் பொலிஸ் அதிகாரி கைது!

சொகுசு வாகன நிதி மூல விசாரணையில் பெண் பொலிஸ் அதிகாரி கைது!

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சொகுசு மோட்டார் வாகனம் ஒன்றைக் கொள்வனவு செய்தமை மற்றும் அதற்கான மாதாந்த குத்தகைக் கொடுப்பனவுகளைச் செலுத்தியமைக்குப் பயன்படுத்தப்பட்ட பணத்தின் மூலத்தைக் கண்டறிவது தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் (CID) கைது செய்யப்பட்ட பிரதம பொலிஸ் பரிசோதகர் (CIP) வருணி போகஹவத்த, நேற்று (03) மாத்தறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது அவரை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (06) வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொட்டவில பொலிஸ் நிலையத்தின் நிர்வாகப் பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரியாகப் பணியாற்றிய அவரிடமிருந்து சொகுசு மோட்டார் வாகனம் ஒன்றையும் அண்மையில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

மாத்தறை கூட்டுறவுச் சங்கத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் 100 கோடி ரூபாவுக்கும் அதிகமான நிதி மோசடியுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரே குறித்த வாகனத்திற்கான மாதாந்த குத்தகைக் கொடுப்பனவுகளைச் செலுத்தி வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், குறித்த பொலிஸ் அதிகாரியின் மாதாந்த சம்பளம் சுமார் 1 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாவாக உள்ள நிலையில், அவர் பயன்படுத்திய சொகுசு வாகனத்திற்கான மாதாந்த குத்தகைக் கொடுப்பனவு மாத்திரம் 1 இலட்சத்து 32 ஆயிரம் ரூபாவாக இருந்துள்ளதாக விசாரணையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனையடுத்து, வாகனத்தைக் கொள்வனவு செய்வதற்கும் அதன் குத்தகைக் கொடுப்பனவுகளைச் செலுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்ட நிதி எங்கிருந்து பெறப்பட்டது என்பது தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த நிதி மோசடி விவகாரத்துடனான தொடர்புகள் மற்றும் வாகனக் கொள்வனவுக்கான பணத்தின் மூலத்தைக் கண்டறிவதே இந்த விசாரணைகளின் முக்கிய நோக்கமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கிளிநொச்சியில் குளங்களிலிருந்து மணல் விநியோகிப்பதற்கான இடைக்கால தடை நீக்கம்!
செய்திகள்

கிளிநொச்சியில் குளங்களிலிருந்து மணல் விநியோகிப்பதற்கான இடைக்கால தடை நீக்கம்!

November 4, 2026
அமெரிக்க இடைத்தேர்தலில் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சிக்குப் பின்னடைவு!
உலக செய்திகள்

அமெரிக்க இடைத்தேர்தலில் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சிக்குப் பின்னடைவு!

November 4, 2026
2026 நான்காம் காலாண்டில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படுமா?;  நாளை இறுதி முடிவு!
செய்திகள்

2026 நான்காம் காலாண்டில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படுமா?; நாளை இறுதி முடிவு!

November 4, 2026
அக்குறணை குடுகலையில் வாகன உதிரிப்பாகக் கடையில் திடீர் தீ விபத்து!
செய்திகள்

அக்குறணை குடுகலையில் வாகன உதிரிப்பாகக் கடையில் திடீர் தீ விபத்து!

November 4, 2026
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.90 இலட்சம் பெறுமதியான கடல் அட்டைகள் பறிமுதல்!
செய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.90 இலட்சம் பெறுமதியான கடல் அட்டைகள் பறிமுதல்!

November 4, 2026
இனி பணத்தைச் சேமிக்க வேண்டிய அவசியமே இருக்காதா?; எலான் மஸ்க்கின் எதிர்காலக் கணிப்பு
உலக செய்திகள்

இனி பணத்தைச் சேமிக்க வேண்டிய அவசியமே இருக்காதா?; எலான் மஸ்க்கின் எதிர்காலக் கணிப்பு

November 4, 2026
Next Post
கிளிநொச்சியில் குளங்களிலிருந்து மணல் விநியோகிப்பதற்கான இடைக்கால தடை நீக்கம்!

கிளிநொச்சியில் குளங்களிலிருந்து மணல் விநியோகிப்பதற்கான இடைக்கால தடை நீக்கம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு