இலங்கை போக்குவரத்துச் சபையின் அதிகாரி ஒருவர் தனது தனிப்பட்ட சொந்த வாகனத்தை போக்குவரத்து சபைக்கு வழங்கி பெருந்தொகையான பணத்தை வாடகையாகப் பெற்றுள்ளதாக கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அந்த சாரதி, தனது வாகனத்திற்கு சுமார் 11 இலட்சம் ரூபாயினை மாதாந்த வாடகையாகப் பெற்றுள்ளதாக கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அதிகாரியின் கார், வாடகை நிறுவனம் மூலம் போக்குவரத்து திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தலைமை அலுவலகம்
மேலும், டிப்போ அத்தியட்சகர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்கள் 2022 ஆம் ஆண்டு வரம்பிற்கு மேல் எரிபொருளை எடுத்துச் சென்றுள்ளதாகவும், அதற்காக செலவிடப்பட்ட தொகை இருபத்தி ஏழு இலட்சத்துக்கும் அதிகம் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபையின் தலைமை அலுவலகத்தில் கைரேகை இயந்திரங்களை புதுப்பிப்பதற்காக 2022 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட நான்கு இலட்சம் ரூபா செலவிடப்பட்ட போதிலும், அவை செயற்படுத்தப்படவில்லை என கணக்காய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வவுனியாவிலிருந்து கொழும்புக்கு இரண்டு பயணங்களுக்கும், வவுனியாவிலிருந்து கண்டிக்கு இரண்டு பயணங்களுக்கும் பேருந்துகள் சேர்க்கப்படாததால் 2022ஆம் ஆண்டில் ஐம்பத்தேழு கோடிக்கும் அதிகமான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்காய்வு அறிக்கை கூறுகிறது.
இலங்கை போக்குவரத்து சபையின் 2022 வருடாந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் சேர்க்கப்பட்டிருந்த இந்த தகவல்களின் மூலமாக இந்த மோசடி விவரங்கள் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.