கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் கொக்கெய்ன் காப்ஸ்யூல்களை உட்கொண்டு அவற்றை கடத்த முயன்ற வெளிநாட்டுப் பெண் ஒருவரை இலங்கை சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 38 வயதான மடகாஸ்கன் பெண், 35 மில்லியன் பெறுமதியான சுமார் 75 கொக்கைன் காப்ஸ்யூல்களை விழுங்கியதாக சந்தேகிக்கப்படுகின்றது.
குறித்த பெண் ஏப்ரல் 12 ஆம் திகதி எத்தியோப்பியாவில் உள்ள அடிஸ் அபாபாவிலிருந்து இந்தியாவின் மும்பை வழியாக விஸ்டாரா ஏர்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்தார்.
பெண் ஆணுறைகளில் அடைக்கப்பட்ட கொக்கெய்ன் காப்ஸ்யூல்களை உட்கொண்டார், கசிவு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக அவற்றை கவனமாக டேப்பால் மூடிவிட்டார் என்று இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மடகாஸ்கன் விழுங்கிய போதைப்பொருள் காப்ஸ்யூல்களை பிரித்தெடுப்பதற்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரின் உடலில் இருந்து விழுங்கப்பட்ட போதைப்பொருள் காப்ஸ்யூல்கள் பிரித்தெடுக்கப்பட்ட பின்னர், மேலதிக விசாரணைக்காக அவர் இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.