இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் கனமழையைத் தொடா்ந்து ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி 14 போ் உயிரிழந்ததுடன் மூவர் மாயமாகியுள்ளதாக அதிகாரிகள் நேற்று(14) தெரிவித்தனா்.
தெற்கு சுலவேசி மாகாணத்தின் டாரா டொரஜா மாவட்டத்திள்ள மலைப் பகுதிகளில் நேற்று முன்தினம்(13) இரவு ஏற்பட்ட மண்சரிவு 4 வீடுகளைச் சூழ்ந்தது. மகலே, தெற்கு மகலே ஆகிய தொலைதூர கிராமங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இராணுவ வீரா்கள், பொலிஸார், தன்னாா்வலா்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்
.
இந்த இரு கிராமங்களிலிருந்து 14 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. காணாமல் போன மூவரைத் தேடும் பணி நடைபெற்று வருவதாக தேசிய பேரிடா் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.தொலைத்தொடா்பு கம்பங்கள் சரிந்தது, மோசமான வானிலை, உறுதியற்ற நிலப்பரப்பு ஆகியவற்றால் மீட்பு பணி தொய்வடைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.