பெரிய வெங்காயம் ஏற்றுமதிக்கு இந்தியா விதித்திருந்த தடை இலங்கைக்கு மட்டும் உத்தியோகபூர்வமாக நீக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
இதன்படி, பத்தாயிரம் மெட்றிக் தொன் பெரிய வெங்காயத்தை இலங்கைக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு கிடைக்கும் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, இந்தியாவிலிருந்து (India) இலங்கைக்கு பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வது தொடர்பில் ஆராய்வதற்காக அந்நாட்டின் பிரதிநிதி ஒருவர் இலங்கை வருகை தந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்தியாவிலிருந்து இறக்குமதி
அத்தோடு, பெரிய வெங்காயம் (Big onion) ஏற்றுமதிக்கான தடையை இந்தியா மேலும் நீட்டித்திருந்ததன் காரணமாக நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள பெரிய வெங்காயப் பிரச்சினைக்கு தீர்வாக குறிப்பிட்ட அளவு பெரிய வெங்காயத்தை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்காக அரசாங்கம் ஏற்கனவே பல தடவைகள் இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.