சட்டவிரோதமான முறையில் கால்நடைகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி மீது எம்பிலிபிட்டிய பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அந்த வாகனத்தில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
எம்பிலிப்பிட்டிய – மஹா பலஸ்ஸ பகுதியில் இரவு நேர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் உத் தியோகத்தர்கள் சந்தேகத்திற்கிடமாக பயணித்த பாரவூர்தி யொன்றை நிறுத்துமாறு உத்தர விட்டனர்.
இந்த உத்தரவை மீறிய பாரவூர்திச் சாரதி, பொலிஸ் உத்தி யோகத்தர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், வாகனம் செலுத்தியபோது, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.துப்பாக்கிச் சூட்டுக்கு மத்தி யில் தப்பிச்சென்ற சந்தேகநபர்கள் பாரவூர்தியிலிருந்த மாடுகளைக் காட்டுப் பகுதியில் விடுவித்து, வீரகட்டிய பகுதிக்கு தப்பிச் சென்றுள்ளனர்.
அதன்போது, பொலிஸார் அவர்களை சுற்றிவளைத்தனர். சம்பவத்தில் பாரவூர்தியில்
இருந்த ஒருவர் காயமடைந்த நிலையில் அம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு கொண்டு
செல்லப்பட்டார்.எனினும், அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முன்னதாகவே உயிரிழந்ததாக
பொலிஸார் தெரிவித்தனர்.பாரவூர்தியிலிருந்த மேலும் மூவரை பொலிஸார் கைது செய்ததுடன் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிக் காயமடைந்த பசுவொன்றை கால்நடை மருத்துவரிடம் சிகிச்சைக்காக
அனுப்பி வைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.
இதேவேளை, பாரவூர்தியை துரத்திச் சென்ற பொலிஸ் உத்தி யோகத்தர்களின் வாகனத்துக்கு
இடையூறு ஏற்படுத்தியகார் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.