மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் வியாழக்கிழமை (18) கரை ஒதுங்கியதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
குறித்த சடலம் 55 வயது மதிக்கத்தக்க பெண்ணுடைய சடலம் எனவும் இதுவரை சடலம் அடையாளம் காணப்படவில்லை எனவும் எனவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
மேலும் இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.