நுவரெலியா நகரில் வசந்த காலத்தையொட்டி வருடம் தோறும் நடைபெறும் மலர் கண்காட்சி நுவரெலியா மாநாகரசபை ஏற்பாட்டில் விக்டோரியா பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்ட மலர் கண்காட்சி நேற்று (20) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதனை, ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டுகளித்து வருகின்றனர்.
ஏப்ரல் மாத வசந்த காலத்தில் ஒரு கட்டமாக வருடம் தோறும் குறித்த மலர் கண்காட்சி நடைபெறும் இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இம்மலர் கண்காட்சியில் விதவிதமான மலர்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட உருவ பொம்மைகள், மிருகங்களின் உருவம் காய்கறிளின் உருவம் என பல வடிவங்களில் உருவ அலங்காரங்களும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
நுவரெலியா மாநகர சபையின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த மலர் கண்காட்சியில் பிரதம அதிதியாக முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.பி.ரத்நாயக்க மற்றும் கண்டி இந்திய உயர் ஸ்தானிகர் வைத்தியர் எஸ். அதிரா மற்றும் நுவரெலியா மாநகரசபை விசேட ஆணையாளர் திருமதி சுஜீவ போதிமான, முன்னாள் மாநகரசபை முதல்வர்கள் , நுவரெலியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் மாநகரபை உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.