30 கிலோகிராம் நிறையுடைய போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பியகம பொலிஸார் தெரிவித்தனர்.
பியகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கடுவலை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
31 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையில் சந்தேக நபரிடமிருந்து 15 கிலோகிராம் ஐஸ் , 14 கிலோ கிராம் ஹாஷ் மற்றும் 941 கிராம் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் சந்தேக நபரிடமிருந்து 7 இலட்சம் ரூபா பணமும் வாகனமொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பியகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.