Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மேன்காமம் குளம் அபகரிப்பு; உண்மை அறிய சாணக்கியன் நேரடி விஜயம்!

மேன்காமம் குளம் அபகரிப்பு; உண்மை அறிய சாணக்கியன் நேரடி விஜயம்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மேன்காமம் குளத்தின் பகுதிகளை பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நேற்று (27) நேரில் சென்று பார்வையிட்டார்.

அண்மைக்காலமாக இக்குளத்தின் பகுதிகளை சிலர் ஆக்கிரமித்து வருவதாகவும், கனரக வாகனங்களை பயன்படுத்தி குளத்தின் பகுதிகளை சேதப்படுத்தி, அங்கிருக்கும் நீரை வெளியேற்றி விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் சாணக்கியனிடம் அந்த கிராம மக்கள் முறையிட்டுள்ளனர்.

அதையடுத்து, அப்பகுதிக்கு நேற்றைய தினம் நேரடி விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அங்கே கள நிலவரம் குறித்து அவதானித்துள்ளார்.

அத்துடன் இது தொடர்பாக மத்திய நீர்பாசன திணைக்கள பணிப்பாளருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆக்கிரமிப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வு நடவடிக்கை தொடர்பாகவும் கேட்டறிந்தார்.

மேன்காமம் குளமானது நீண்ட காலமாக காலத்துக்கு காலம் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, குளத்தின் பெரும்பகுதிகள் சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்ட காரணத்தினால் மேன்காமம் குளத்தை நம்பி மேற்கொள்ளப்பட்டு வரும் விவசாயம், நன்னீர் மீன்பிடி, கால்நடை வளர்ப்பு போன்றவை பாதிக்கப்பட்டுள்ளன.

குளம் ஆக்கிரமிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ள அப்பிரதேச மக்கள் பலரது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் அப்பகுதியில் எதிர்காலத்தில் குளம் இல்லாத சூழல் ஏற்படலாம் எனவும் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தை எல்லைப்படுத்தி குளத்தினை தூர்வார்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதோடு குளத்தினை ஆக்கிரமிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து, குளத்தை பாதுகாக்க உதவுமாறும் அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் மகாத்மா காந்தியின் ஜனனதின நிகழ்வுகள்
செய்திகள்

மட்டக்களப்பில் மகாத்மா காந்தியின் ஜனனதின நிகழ்வுகள்

October 2, 2026
வவுணதீவில் குற்றவாளிகளுடன் மது அருந்திய பொலிஸ் கொஸ்தாப்பர் பணியில் இடைநீக்கம்
செய்திகள்

வவுணதீவில் குற்றவாளிகளுடன் மது அருந்திய பொலிஸ் கொஸ்தாப்பர் பணியில் இடைநீக்கம்

October 2, 2026
50க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை மூட அரசாங்கத்திற்கு உரிமை உள்ளதா?; ஜோசப் ஸ்டாலின் கேள்வி
செய்திகள்

50க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை மூட அரசாங்கத்திற்கு உரிமை உள்ளதா?; ஜோசப் ஸ்டாலின் கேள்வி

October 2, 2026
மயிலத்தமடு மற்றும் மாதவணையில் பண்ணையாளர்களுக்கு நெருக்கடி அதிகரிப்பு
காணொளிகள்

மயிலத்தமடு மற்றும் மாதவணையில் பண்ணையாளர்களுக்கு நெருக்கடி அதிகரிப்பு

October 2, 2026
யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான பணமோசடி வழக்கு ஒத்திவைப்பு!
செய்திகள்

யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான பணமோசடி வழக்கு ஒத்திவைப்பு!

October 2, 2026
ஒரு ஆண்டில் 9,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள், இளைஞர்கள் போதைப்பொருள் வழக்கில் கைது!
செய்திகள்

ஒரு ஆண்டில் 9,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள், இளைஞர்கள் போதைப்பொருள் வழக்கில் கைது!

October 2, 2026
Next Post
அதிகரிக்கும் கைதிகளால் விசேட நடவடிக்கைகள் முன்னெடுப்பு!

அதிகரிக்கும் கைதிகளால் விசேட நடவடிக்கைகள் முன்னெடுப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு