Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சச்சினுடன் வீதியில் கிரிக்கெட் விளையாடிய இளவரசர் வில்லியம்; கேட் தம்பதியினர்!

சச்சினுடன் வீதியில் கிரிக்கெட் விளையாடிய இளவரசர் வில்லியம்; கேட் தம்பதியினர்!

22 minutes ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள், விளையாட்டு

பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் மிடில்டன் ஆகியோர் மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணமாக இந்தியா சென்றுள்ளனர்.

கடந்த 2024ஆம் ஆண்டு புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு கேட் மிடில்டன் மேற்கொள்ளும் மிக முக்கியமான வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

பயணத்தின் முதல் நாளான இன்று (16) மும்பையில் உள்ள பாரம்பரியமிக்க பகுதியில், இந்தியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து அவர்கள் ஸ்ட்ரீட் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தனர்.

தெற்கு மும்பையின் பலார்ட் எஸ்டேட் பகுதியில் உள்ள தெரு ஒன்றில் நடைபெற்ற இந்த உற்சாகமான கிரிக்கெட் விளையாட்டின் போது, பாரம்பரிய தலைப்பாகை அணிந்த இசைக்கலைஞர்களின் முழக்கங்களுக்கு மத்தியில், வில்லியம் மற்றும் கேட் இருவரும் சச்சின் வீசிய பந்துகளை எதிர்கொண்டனர்.

மேலும், உள்ளூர் குழந்தைகள் மற்றும் பார்வையாளர்களுடன் அவர்கள் மகிழ்ச்சியுடன் உரையாடினர். விளையாட்டு மைதானங்கள் குறைவாகவும், மக்கள் நெருக்கம் அதிகம் உள்ளதாகவும் விளங்கும் மும்பை நகரின் பாரம்பரியமான ‘அல்லி கிரிக்கெட்’ (Alley cricket) கலாசாரத்தை அவர்கள் இதன் மூலம் அனுபவித்தனர்.

பயணத்தின் ஒரு பகுதியாக, பிரித்தானிய மற்றும் இந்தியாவின் கூட்டு முயற்சியால் உருவான பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து முறைகளைக் குறிக்கும் வகையில், மும்பை மெட்ரோ ரயில் அமைப்பில் தம்பதியினர் பயணம் செய்யவுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, இளவரசர் வில்லியமினால் 2020ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எர்த்ஷொட் பரிசுத் திட்டத்தின் இறுதிப் போட்டியாளர்களை அவர்கள் சந்திக்கவுள்ளனர்.

காலநிலை மாற்றத்துக்கான தீர்வுகளைக் கண்டறிந்து ஊக்குவிக்கும் இந்தத் திட்டத்தின்கீழ், வெற்றிபெறும் ஐந்து பேருக்கு தலா 1.3 மில்லியன் டொலர் பரிசு வழங்கப்படவுள்ளதுடன், இதற்கான வெற்றியாளர்கள் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட உள்ளனர்.

தமது இந்த மூன்று நாள் பயணத்தின் நிறைவாக, தம்பதியினர் புதுடெல்லிக்குச் சென்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கவுள்ளனர்.

கடந்த 2024ஆம் ஆண்டு புற்றுநோய்க்கான தடுப்பு கீமோதெரபி சிகிச்சைகளைப் பெற்ற 44 வயதான கேட் மிடில்டன், அதன் பின்னர் தனது உத்தியோகபூர்வப் பணிகளைக் கணிசமாகக் குறைத்துக் கொண்டிருந்தார்.

தற்போது பூரண குணமடைந்துள்ள அவர், படிப்படியாகப் பொது நிகழ்வுகளில் கலந்துகொள்ளத் தொடங்கியுள்ளார்.

எனினும், புற்றுநோய் சிகிச்சைக்குப் பின்னர் அவர் இளவரசர் வில்லியமுடன் இணைந்து வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.

முன்னதாக, சிறுவர் மேம்பாட்டுப் பணிகள் தொடர்பாக கடந்த மே மாதம் அவர் இத்தாலிக்குத் தனியாகப் பயணம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு புதிய தீர்வு!
செய்திகள்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு புதிய தீர்வு!

November 16, 2026
13ஆவது திருத்தத்தை ஏற்க முடியாது; கஜேந்திரகுமார்!
செய்திகள்

13ஆவது திருத்தத்தை ஏற்க முடியாது; கஜேந்திரகுமார்!

November 16, 2026
2027ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறாது என்பது எங்களுக்கும் தெரியும்; NPP எம்.பி
செய்திகள்

2027ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறாது என்பது எங்களுக்கும் தெரியும்; NPP எம்.பி

November 16, 2026
மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்வு!
செய்திகள்

மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்வு!

November 16, 2026
மாத்தளை மனிதப் புதைகுழி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது!
செய்திகள்

மாத்தளை மனிதப் புதைகுழி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது!

November 16, 2026
அஸ்வெசும புதிய பயனாளிகளுக்கான கொடுப்பனவு நவம்பர் 27 முதல் ஆரம்பம்!
செய்திகள்

அஸ்வெசும புதிய பயனாளிகளுக்கான கொடுப்பனவு நவம்பர் 27 முதல் ஆரம்பம்!

November 16, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.