முள்ளிவாய்கால் – மே 18 தமிழின படுகொலையின் நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் இன்று வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு நடை பெறவுள்ளது. இதில் மக்கள் அனைவரையும் ஒன்றுகூடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் அழைப்பு விடுத்துள்ளார்.நேற்றைய தினம் அவரின் பணிமனையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
மேலும், இது கரி வாரம். 2009 மே 18 காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் பொதுமக்கள் இந்த வாரத்தில் கொல்லப்பட்டதாக முன்னாள் மன்னார் ஆயர் யோசப் இராயப்பு தகவல் வெளியிட்டார்.
கிட்டத்தட்ட இந்த போர் தொடங் கிய காலமிருந்து 3 இலட்சம் மக்களும் போராளிகளும் கொல்லப்பட்டனர். அதில் பல தலைவர்களும் உள்ளடக்கப் பட்டுள்ளனர். இருந்தபோதும் இந்த முள்ளிவாய்க்கால் வாரத்தை நாங்கள் வருடா வருடம் நினைவு கூர்ந்து வருகின்றோம்.
கடந்த இரண்டு வருடங்கள் கொரோனா தொற்று பரவலால் பணிமனைகள் வீடுகளில் நினைவு கூர்ந் தோம் இருந்தபோதும் இந்த முறை தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு – அம்பாறை பிராந்தியம்
கல்லடி கடற்கரையில் மாலை 5 மணிக்கு நினைவேந்தலை முன்னெடுக்கிறது. இந்த நினைவேந்தலில் இன, மத சமய வேறுபாடுகளின்றி உணர்வுபூர்வமான – தமிழ் பேசும் மனிதனாக – தமிழினத்துக்காக தமிழினத்தின் உரிமைக்காக போராடிய இனமாக நினைவேந்தலை மேற்கொள்ள கல்லடி கடற்கரையில் மக்கள் அனைவரும் ஒன்று கூட வேண்டும் என்றும் அவர் கூறினார்.