Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழ் மக்களுக்கு செய்த அட்டூழியங்களை மறுத்து வருகிறது அரசு; மனித உரிமைகள் கண்காணிப்பகம்!

தமிழ் மக்களுக்கு செய்த அட்டூழியங்களை மறுத்து வருகிறது அரசு; மனித உரிமைகள் கண்காணிப்பகம்!

3 years ago
in செய்திகள்

இலங்லையில் போர் முடிவடைந்து பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகும், நீதி வழங்கப்படவில்லை. மாறாக இலங்கை அரசு தனது படைகள் செய்த அட்டூழியங்களை மறுத்து வருகிறது என குற்றம்சாட்டியுள்ளது மனித உரிமைகள் கண்காணிப்பகம்.

2009 இல் முடிவடைந்த நாட்டின் கொடூரமான உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் இறந்தவர்களை நினைவு கூரும் மே 18 தொடர்பில், மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் ‘தாக்குதலற்ற வலயங்கள்’ என்ற இடங்களை அறிவித்து பொதுமக்கள் அங்கு சென்ற பின்னர் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டனர்.அத்துடன் விடுதலைப் புலிகளின் தோல்விக்குப் பின்னர், அரசாங்கப் பாதுகாப்புப் படையினரிடம் பிடிபட்ட ஏராளமான போராளிகள் மற்றும் சிவிலியன் ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் சட்டத்திற்கு புறம்பாக கொல்லப்பட் டனர் அல்லது பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டனர் என்பதை மனித உரிமைகள்
கண்காணிப்பகம் நினவூட்டியுள்ளது.

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாட்ஷி கங்குலி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-போர் முடிவடைந்து பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகும், நீதி வழங்கப்படவில்லை மாறாக இலங்கை அரசு தனது படைகள் செய்த அட்டூழியங்களை மறுத்து வருகிறது. காணாமல் போனவர்களின் தாய்மார்கள், தங்கள் அன்புக்குரியவர்களின்
தலைவிதியை அறிய தொடர்ந்து முயன்று வரும் ஒரு குழுவினர், பாதுகாப்புப் படையினரின் துன்புறுத்தலை எதிர்கொள்கின்றனர்.

காணாமற்போனோரைக் கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட காணாமற்போனோர் தொடர்பான அலுவலகம் எந்த முன்னேற்றமும் அடையவில்லை.மோதலின்போது, சித்திர வதை, சட்டத்திற்குப் புறம்பான கொலைகள், பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் சிறுவர் படையினரைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட எண்ணற்ற உரிமை மீறல்களை இரு தரப்பினரும்மேற்கொண்டனர்.26 ஆண்டுகால உள்நாட்டுப் போரின்போதும் அதற்குப் பின்னரும் நடந்த பாரதூரமான உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்களுக்குப் பொறுப்பான வர்களைத் தீவிரமாக விசாரித்து உரிய முறையில் தண்டிக்கத் தவறிவிட்டதாக ஐக்கிய நாடுகளின் அமைப்புக்கள், மனித உரி மைகள் கண்காணிப்பு மற்றும் பிற மனிதஉரிமை அமைப்புகள் நீண்டகாலமாக இலங்கை நிர்வாகங்களை விமர்சித்து வருகின்றன.குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சில அரச அதிகாரிகள் அரசியல் ரீதியாக பலம் வாய்ந்தவர்களாக அல்லது இலங்கை இராணுவத்தில் உயர் பதவிகளை வகிக்கின்றனர். தமிழர்களுக்குச் சொந்தமான அல்லது இந்துக் கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களை அதிகாரிகள் கைப்பற்றுவது அல்லது வைத்திருப்பது தொடர்கிறது.

போர்க் குற்றங்கள் தொடர்பில் உள்நாட்டு விசாரணையை தொடர அரசாங்கம் விரும்பாத தால், பாதிக்கப்பட்டவர்களும் அவர்களது குடும்பத்தினரும் வேறு இடங்களில் நீதியைப் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இலங்கை மற்றும் வெளிநாட்டு நீதித்துறை அதிகாரிகளின் ‘கலப்பின’ செயல்முறையை திட்டமிடும் முந்தைய ஒப்பந் தத்தில் இருந்து அரசாங்கம் விலகிய பின்னர், எதிர்கால வழக்குகளில் பயன்படுத்துவதற்கான ஆதாரங்களை சேகரிக்க ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்பேரவை,ஒரு பொறுப்புக் கூறல் திட்டத்தை நிறுவியது.இந்தநிலையில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ‘உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை’ உருவாக்குவ தற்கு முன்மொழிந்தார். ஆனால் முந்தைய அனைத்து உள்நாட்டுஆணைக்குழுக்களின் பரிந்துரைகளும் புறக்கணிக்கப் பட்டுள்ளன. இது நீதிக்கான முயற்சிகளை ஊக்குவிப்பதை விட ஓரங்கட்டுவதற்கான ஒரு வழியாகும்.எனவே இலங்கை அரசாங் கம் முட்டுக்கட்டை போடுவதை நிறுத்திவிட்டு, பலர் பாதிக்கப் படும் பாரதூரமான மீறல்களை விசாரித்து வழக்குத் தொடர வேண்டிய கடமையை நிறை வேற்ற வேண்டும்.

அது வரை, இலங்கையில் வெளிநாடுகளில் நீதியை தீவிரமாக தொடர ஐக்கிய நாடுகளின்
பொறுப்புக்கூறல் திட்டத்துடன் ஏனைய நாடுகள் இணைந்து செயற்படவேண்டும் – என்றார்.

தொடர்புடையசெய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
Next Post
சிறுபான்மையினரின் மேல் திணிக்கப்படும் மத துன்புறுத்தல்கள்; அமெரிக்கா அறிக்கை!

சிறுபான்மையினரின் மேல் திணிக்கப்படும் மத துன்புறுத்தல்கள்; அமெரிக்கா அறிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.