Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அதிகரித்து செல்லும் புவி வெப்பநிலை; உலக வானிலை அமைப்பு எச்சரிக்கை!

அதிகரித்து செல்லும் புவி வெப்பநிலை; உலக வானிலை அமைப்பு எச்சரிக்கை!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

கடந்த 174 வருடங்களில் பதிவாகாத அளவில் இந்த வருடத்தில் புவியின் வெப்பநிலை அதிகரித்துள்ளதுடன் 65 ஆண்டுகளின் பின்னர் கடலின் வெப்பநிலையும் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.

2027ஆம் ஆண்டுக்குள், புவியின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸுக்கு அதிகமாக உயர்வடைவதற்கு 66% வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெப்பநிலை வேகமாக அதிகரிக்கும் பட்சத்தில் பனிப்பாறைகள் உருகுவதும் அதிகரிக்கும் எனவும் கடல் மட்டமும் வேகமாக உயரக்கூடிய அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் எதிர்வரும் மே மாதம் வரையில் அதிகமான வெப்பநிலை பதிவாகும் எனவும், எல் நினோ உச்சத்தை அடைய வாய்ப்புள்ளதாகவும் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அறிவித்துள்ளது.

இந்த வெப்பநிலை உயர்வு என்பது எதிர்வரும் காலங்களில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புவிக்கு எதிராக, அதன் வளங்களை அழிக்கும் அனைத்து நடவடிக்கைகளும் ஒரு தனி நபரிடமிருந்து ஆரம்பிக்கப்படுவது போன்று, புவி மாசடைவதை தடுக்கும் நடவடிக்கைகளும் தனி நபரிடமிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும்.

மனிதர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க புவியின் வளங்கள் குறைந்து கொண்டே செல்கின்றது.

உலகில் ஒவ்வொரு நாளும் 700இற்கும் அதிகமான சிறுவர்கள் உயிரிழப்பதாகவும், ஒரு கோடிக்கும் அதிகமான சிறுவர்கள் தீவிர மாசடைந்த பகுதிகளில் வாழ்ந்து வருவதாகவும் யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.

புவியில் உள்ள வாயு, நீர் உள்ளிட்ட சகல வளங்களையும் நாம் பயன்படுத்தி வருகின்றோம். சனத்தொகை அதிகரிப்புக்கு ஏற்ப எல்லையற்ற வளங்களும் பயன்படுத்தப்பட்டுக் கொண்டே வருகின்றன.

இந்த நிலையில் காலநிலை மாற்றம் போன்ற காரணிகளால் புவியிலுள்ள வளங்கள் மாசடையும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன. புவியின் பாதுகாப்பிற்காக மாத்திரமின்றி மனிதனின் பாதுகாப்பிற்காகவும் அன்றாட வாழ்வில் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும்.

இந்த நிலையில், எம்மை வாழ வைக்கும் புவி ஆரோக்கியமாக இருந்தால் தான், நாம் ஆரோக்கியமாக வாழ முடியும் என்பதைக் கருத்திற் கொண்டு, நிலம், நீர் மற்றும் காற்று மாசுபாட்டை குறைத்து, புவியைப் பாதுகாக்க உறுதியேற்க வேண்டும் என்று அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு எதிராக புதிய சட்டம்; அரசாங்கம் கவனம்!
செய்திகள்

பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு எதிராக புதிய சட்டம்; அரசாங்கம் கவனம்!

June 9, 2026
திறைசேரி டொலர் காணாமல் போன விவகாரம்; மத்திய வங்கிக்கு ஒரு வார அவகாசம்!
செய்திகள்

திறைசேரி டொலர் காணாமல் போன விவகாரம்; மத்திய வங்கிக்கு ஒரு வார அவகாசம்!

June 9, 2026
ஈஸ்டர் தாக்குதல் உண்மை வெளிவராமல் தடுக்க உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, திலித் ஜயவீர முயற்சி
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் உண்மை வெளிவராமல் தடுக்க உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, திலித் ஜயவீர முயற்சி

June 9, 2026
தொல்பொருள் மதிப்புள்ள புத்தர் சிலையை திருடிய பிக்கு மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரிகள் கைது
செய்திகள்

தொல்பொருள் மதிப்புள்ள புத்தர் சிலையை திருடிய பிக்கு மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரிகள் கைது

June 9, 2026
மட்டு மாமாங்கம் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு
செய்திகள்

மட்டு மாமாங்கம் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு

June 9, 2026
ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்
செய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்

June 8, 2026
Next Post
பிரதான பாதாள குழு உறுப்பினர் சர்வதேச விமான நிலையத்தில் கைது!

பிரதான பாதாள குழு உறுப்பினர் சர்வதேச விமான நிலையத்தில் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.