Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஐ.பி.எல் தொடரில் மலிங்காவின் சாதனையை முறியடித்த சுனில் நரைன்!

ஐ.பி.எல் தொடரில் மலிங்காவின் சாதனையை முறியடித்த சுனில் நரைன்!

2 years ago
in செய்திகள், விளையாட்டு

ஒரே இடத்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற லசித் மலிங்காவின் சாதனையை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன் முறியடித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 47வது போட்டி நேற்றுமுன்தினம்(29) கொல்கத்தாவில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையில் இடம் பெற்றது.

நாணயசுழற்சில் வெற்றிப்பெற்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 153 ஓட்டங்களை பெற்றது.

இப்போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் நிர்ணயித்த 154 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 17வது ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 157 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

நரேன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

தனது நான்கு ஓவர்களில் வெறும் 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து முதல் இன்னிங்ஸில் அக்சர் பட்டேலின் விக்கெட்டைக் கைப்பற்றினார்.

குறித்த விக்கெட்டுடன் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில்
நரைன் வீழ்த்திய விக்கெட்டுக்களின் எண்ணிக்கை 69 ஆனது.

இந்த லீக்கில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற புதிய சாதனையையும் படைத்தார்.

முன்னதாக, லசித் மலிங்கா தனது ஐபிஎல் வாழ்க்கையில் வான்கடே மைதானத்தில் 68 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த மதிப்புமிக்க சாதனையை வைத்திருந்தார்.

இந்த சாதனை முறியடிக்கப்பட்டது.

டெல்லியில் மூத்த சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா 58 விக்கெட்டுகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 52 விக்கெட்டுகளுடன் நான்காவது இடத்தில் உள்ளார்.

இந்தியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் வான்கடே மைதானத்தில் 49 விக்கெட்டுகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

இந்த வெற்றியின் மூலம், கொல்கத்தா அணி ஐ.பி.எல் 2024 புள்ளிகள் பட்டியலில் 12 புள்ளிகளுடன் 2 இடத்தைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் வழக்குத் தீர்ப்பை கத்தோலிக்க திருச்சபை வரவேற்பு!
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் வழக்குத் தீர்ப்பை கத்தோலிக்க திருச்சபை வரவேற்பு!

September 23, 2026
ஆடை சக்கரத்தில் சிக்கி மோட்டார் சைக்கிள் விபத்து; பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு!
செய்திகள்

ஆடை சக்கரத்தில் சிக்கி மோட்டார் சைக்கிள் விபத்து; பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு!

September 23, 2026
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!
செய்திகள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

September 23, 2026
மட்டக்களப்பு மாநகரசபை – காத்தான்குடி நகரசபை இடையே ஏற்பட்ட முறுகல் காத்தான்குடி பொலிஸாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது!
செய்திகள்

மட்டக்களப்பு மாநகரசபை – காத்தான்குடி நகரசபை இடையே ஏற்பட்ட முறுகல் காத்தான்குடி பொலிஸாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது!

September 23, 2026
பிரதமருக்கும் IMF பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் சந்திப்பு!
செய்திகள்

பிரதமருக்கும் IMF பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் சந்திப்பு!

September 23, 2026
ஈரானை முற்றிலும் அழித்துவிடுவதாக ட்ரம்ப் எச்சரிக்கை!
செய்திகள்

ஈரானை முற்றிலும் அழித்துவிடுவதாக ட்ரம்ப் எச்சரிக்கை!

September 23, 2026
Next Post
யடவத்தயில் 1,990 போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!

யடவத்தயில் 1,990 போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு