ஈழத்தமிழர்களின் உரிமை கோரிய யுத்தம் முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்டு 14 வருடங்கள் ஆகியுள்ளன.
சொல்லொண்ணா துயரங்களையும், வடுக்களையும், வலியையும் தந்துச் சென்ற இந்த கோர யுத்தத்தின் பிடியில் சிக்குண்டு மீண்டு வந்த தாயகத்தின் உறவுகளும் புலம்பெயர் உறவுகளும் இந்த வலி மிகுந்த நாளை ஒவ்வொரு வருடமும் மே 18 அன்று உணர்வு பூர்வமாக அனுஷ்டித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள பெசன்ட் நகர் கடற்கரையில் மே 17 இயக்கத்தின் ஏற்பாட்டில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது.
இதில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர் வைகோ, மே 17 இயக்கத்தினுடைய தலைவர் திருமுருகன் காந்தி, ஓய்வு பெற்ற உயர் நீதிபதி மன்ற நீதிபதி ஹரிபரந்தாமன் மற்றும் தமிழின உணர்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.