டி20 உலகக் கோப்பை (ICC Men’s T20 World Cup) நடைபெறவுள்ள நிலையில் மேற்கிந்திய தீவுகளுக்கு தீவிரவாத தாக்குதல் மிரட்டல் வந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த அச்சுறுத்தல் வடக்கு பாகிஸ்தானில் இருந்து வந்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த உலகக் கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா நடத்துக்கின்றன.
டி20 உலகக் கோப்பை 2024 போட்டியானது வருகின்ற ஜூன் 1ஆம் திகதி தொடங்குகிறது. இதனையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை வெஸ்ட் இண்டீஸ் தொடங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
குறிப்பாக டி20 உலகக் கோப்பையின்போது வெஸ்ட் இண்டீஸ் நாடுகளை குறிவைத்து தாக்குவோம் என்று வடக்கு பாகிஸ்தானில் இருக்கும் ஐஎஸ்- கொராசனியம் இருந்து மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் 2024 டி20 உலகக் கோப்பை உட்பட உலகின் முக்கிய நிகழ்வுகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவோம் எனவும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த எச்சரிக்கையை தொடர்ந்து பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இந்திய அணி விளையாடுவது குறித்து கேள்வி எழுந்துள்ளது.