Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சிறுநீரகக் கற்களை கரைக்க சிறுநீரை அருந்துமாறு பரிந்துரைத்த ஏ.ஐ!

சிறுநீரகக் கற்களை கரைக்க சிறுநீரை அருந்துமாறு பரிந்துரைத்த ஏ.ஐ!

2 years ago
in செய்திகள், தொழில்நுட்பம்

சிறுநீரகக் கற்களை விரைவாக கரைக்க சிறுநீரை அருந்துங்கள்’ என்ற கூகுள் ஏஐ இன் அறிவுரைக்கு இணையவாசிகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் செல்ல வேண்டிய இடத்துக்கான வழிகாட்டல் முதல் உடல் உபாதைக்கான மருத்துவ ஆலோசனை வரை சகலத்துக்கும் கூகுளில் விடை தேடும் போக்கு மக்களிடையே அதிகரித்து வருகிறது.

இவ்வாறான கூகுள் தேடல்களில் வினோதங்கள் மற்றும் விசித்திரங்களும் அவ்வப்போது நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இப்போது கூகுள் தேடலில் எஸ்ஜிஇ அதாவது ’சர்ச் ஜெனரேட்டிவ் எக்ஸ்பீரியன்ஸ்’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான அனுகூலம் கூடியிருக்கிறது.

இதன் மூலம் கூகுள் தேடல் என்பது மேலும் நுட்பமாகவும், விரிவாகவும், ஆழமாகவும் அமைவதாக கூகுள் நம்பியிருக்கிறது. ஆனால் நிதர்சனத்தில் ஏறுமாறான பதில்களை கூகுள் தந்ததில், தேடுவோர் மட்டுமன்றி கூகுள் நிறுவனத்தையும் சங்கடத்தில் ஆழ்த்தி வருகிறது.

அதற்கு எக்ஸ் தளத்தில் பயனர் ஒருவரின் பகிர்வு உதாரணமனது. தொல்லைதரும் சிறுநீரகக் கற்களிடம் இருந்து எப்படி விடுபடுவது என்று ஒரு பயனர் கூகுளில் தேடியபோது, ​​அவர் அதிர்ச்சிக்குரிய அந்த பரிந்துரையைப் பெற்றார்.

அதில் வழக்கமான ஆலோசனைகளுடன், நம்பவே முடியாத பரிந்துரை ஒன்றும் இடம்பெற்றிருந்தது. அதாவது, ‘சிறுநீரகக் கற்களை தினந்தோறும் குறைந்தது 2 லிட்டர் சிறுநீரை அருந்துங்கள்’ என்று பதில் கிடைத்திருந்தது.

இது கூகுள் தேடலில் மோசமான அனுபவமாக இணைய வாசிகளிடையே பேசுபொருளாகி வருகிறது. இணையத்தில் சரியான வழிகாட்டுதலை தேடுவது, பெரும்பாலும் வெற்றிகரமாக அமைவதில்லை.

அதன்படி அமெரிக்காவில் கூகுள் மேப்பை நம்பி பாலைவனம் சென்றவர்கள் பாலைவனத்தில் சென்று மாட்டிகொண்ட சம்பவமும் அண்மையில் இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

அனோஜனை விடுவிக்க ஜனாதிபதியுடன் அவசர சந்திப்புக்கு தமிழரசுக் கட்சி கோரிக்கை!
செய்திகள்

அனோஜனை விடுவிக்க ஜனாதிபதியுடன் அவசர சந்திப்புக்கு தமிழரசுக் கட்சி கோரிக்கை!

September 24, 2026
புத்தள – மொனராகலையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; ஆறு பேர் வைத்தியசாலையில்!
செய்திகள்

புத்தள – மொனராகலையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; ஆறு பேர் வைத்தியசாலையில்!

September 24, 2026
மட்டு மாங்கேணியில் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் அமரர் திலீபனுக்கு நினைவேந்தல்
செய்திகள்

மட்டு மாங்கேணியில் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் அமரர் திலீபனுக்கு நினைவேந்தல்

September 24, 2026
இந்தியா, சீனா, துருக்கி ரஷ்ய எண்ணெய் வர்த்தகத்தை நிறுத்தினால் போர் ஒரு வாரம் கூட நீடிக்காது; செலென்ஸ்கி!
உலக செய்திகள்

இந்தியா, சீனா, துருக்கி ரஷ்ய எண்ணெய் வர்த்தகத்தை நிறுத்தினால் போர் ஒரு வாரம் கூட நீடிக்காது; செலென்ஸ்கி!

September 24, 2026
ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்தை பலவீனப்படுத்துகின்றன; அராக்சி
உலக செய்திகள்

ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்தை பலவீனப்படுத்துகின்றன; அராக்சி

September 24, 2026
ஐந்து பேர் கொண்ட குடும்பப் பயணத்திற்கு கூடுதல் சீட் பெல்ட் பொருத்தலாம்; போக்குவரத்து அமைச்சர்!
செய்திகள்

ஐந்து பேர் கொண்ட குடும்பப் பயணத்திற்கு கூடுதல் சீட் பெல்ட் பொருத்தலாம்; போக்குவரத்து அமைச்சர்!

September 24, 2026
Next Post
மட்டு வாகரையில் விபத்து; இரு பாடசாலை அதிபர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

மட்டு வாகரையில் விபத்து; இரு பாடசாலை அதிபர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு