கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபசார விடுதி நடத்தி வந்ததாகக் கூறப்படும் மூன்று பெண்கள் கல்கிஸை பொலிஸாரால் நேற்றுமுன்தினம் (7) கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெலிபன்னை,பொலன்னறுவை மற்றும் தெனியாய ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 30,35 மற்றும் 44 வயதுடைய மூன்று பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.