அம்பாறையில் சிறுபோக வேளாண்மை செய்கை ஆரம்பமாகி உள்ள நிலையில் அதிகளவிலான முதலைகள் வெளியேறி மக்கள் குடியிருப்புகளுக்குள் செல்கின்றன.
தற்போது மாவடிப்பள்ளி பாலம் சம்மாந்துறை பகுதி, ஒலுவில் பகுதி , நிந்தவூர், மருதமுனை, பெரியநீலாவணை, நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு, கிட்டங்கி, நாவிதன்வெளி உள்ளிட்ட பகுதிகளை அண்மித்த ஆற்றை விட்டு இரவிலும் பகலிலும் முதலைகள் வெளியேறுவதனால் வீதியால் செல்லும் பயணிகள் மற்றும் பாதசாரிகள் அச்சத்துடனேயே பயணத்தை மேற்கொள்கின்றனர்.
குறிப்பாக இரவு நேரங்களில் அதிகமாக வெளியேறுகின்றன .
இது சுமார் 9, 5, 4 அடி நீளமுடைய முதலைகள் என மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இம்மாவட்டத்தில் உள்ளிட்ட களப்புக்கள் போன்ற இடங்களிலும் முதலை அச்சறுத்தல் தொடர்ந்து வருகின்றன.
மேற்படி பகுதிகளில் உள்ள வாவிகள், குளங்களிலும் முதலைகளின் பெருக்கம் அதிகரித்து காணப்படுகிறது