Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
15 வயது சிறுமி கூட்டு வன்புணர்வு; பெண் உட்பட நான்கு பேர் கைது!

15 வயது சிறுமி கூட்டு வன்புணர்வு; பெண் உட்பட நான்கு பேர் கைது!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வவுனியா – நகரையண்டிய, தேக்கவத்தை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து 15 வயது சிறுமி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா, பண்டாரிக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த 15 வயது பெண் ஒருவரை கடந்த ஜனவரி மாதம் வவுனியா நகரையண்டிய பகுதியில் தேக்கவத்தையில் உள்ள விடுதி ஒன்றிக்கு அழைத்து சென்ற இளைஞர் ஒருவர் குறித்த சிறுமிக்கு போதை மருந்து கொடுத்து கூட்டு வன்புணர்வில் ஈடுபட்டதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இம்மாதம் சிறுமியின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து பெற்றோர் சிறுமியிடம் விசாரித்ததில் சிறுமி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து சிறுவர் பிரிவு உத்தியோகத்தர்களை அணுகிய சிறுமியின் பெற்றோர் அவர்களின் வழிப்படுத்தலில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

முறைப்பாடு தொடர்பில் விசாரணை செய்த வவுனியா பொலிஸார் கூட்டு வன்புணர்வுக்கு உடந்தையாக செயற்பட்டதாக அவரது உறவினரான 20 வயது பெண் ஒருவரையும், வன்புணர்வில் ஈடுபட்ட சந்தேகத்தில் வவுனியா நகரப் பகுதியில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையத்தில் கடமையாற்றும் இளைஞன் உட்பட மூன்று இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நான்கு பேரும் வவுனியா நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், சிறுமியிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைகள் எதிர்வரும் 18 வரை இடைநிறுத்தம்!
செய்திகள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைகள் எதிர்வரும் 18 வரை இடைநிறுத்தம்!

October 14, 2026
23,344 ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு; போட்டிப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியீடு!
செய்திகள்

23,344 ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு; போட்டிப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியீடு!

October 14, 2026
தேரர்களைத் தொடர்ந்து இந்துக் குருக்கள், மௌலவிமார்கள் மீதும் நடவடிக்கையா?- “பாதள பிக்குகளை உருவாக்கியது இந்த ஜேவிபியே”; சம்பிக்க ரணவக்க
செய்திகள்

தேரர்களைத் தொடர்ந்து இந்துக் குருக்கள், மௌலவிமார்கள் மீதும் நடவடிக்கையா?- “பாதள பிக்குகளை உருவாக்கியது இந்த ஜேவிபியே”; சம்பிக்க ரணவக்க

October 14, 2026
பசில் ராஜபக்ஷவைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு; இன்டர்போல் சிவப்பு அறிவிப்பைப் பெறவும் ஆணை!
செய்திகள்

பசில் ராஜபக்ஷவைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு; இன்டர்போல் சிவப்பு அறிவிப்பைப் பெறவும் ஆணை!

October 14, 2026
ஞானசார தேரர் சிறைவாசம் அனுபவிப்பதற்கு சந்தியா ஏக்னலிகொட மீது பழி போடும் பிரசாரங்கள்; ஆறு ஊடக அமைப்புகள் கண்டனம்!
செய்திகள்

ஞானசார தேரர் சிறைவாசம் அனுபவிப்பதற்கு சந்தியா ஏக்னலிகொட மீது பழி போடும் பிரசாரங்கள்; ஆறு ஊடக அமைப்புகள் கண்டனம்!

October 14, 2026
உம்ரா யாத்திரை செல்லும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை; விமானச் சேவைகளில் இடையூறு ஏற்படலாம்!
செய்திகள்

உம்ரா யாத்திரை செல்லும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை; விமானச் சேவைகளில் இடையூறு ஏற்படலாம்!

October 14, 2026
Next Post
மட்டு ரயில்வே வீதியில் 1440 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

மட்டு ரயில்வே வீதியில் 1440 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு