Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கல்லடி முகத்துவாரம் விபுலானந்தா வித்தியாலயத்தில் 64 வது வருட பூர்த்தியினை முன்னிட்டு பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் விசேட நிகழ்வுகள்!

கல்லடி முகத்துவாரம் விபுலானந்தா வித்தியாலயத்தில் 64 வது வருட பூர்த்தியினை முன்னிட்டு பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் விசேட நிகழ்வுகள்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரம் விபுலானந்தா வித்தியாலயத்தின் 64 ஆவது வருடப் பூர்த்தியினை முன்னிட்டு பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில், பழைய மாணவர்களுக்கு இடையிலான கிரிக்கெட் சுற்று போட்டியின் இறுதிநாள் நிகழ்வும், வெற்றியீட்டிய அணிகளுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வும் மற்றும் சாதனை மாணவர்களுக்கு கெளரவம் வழங்கும் நிகழ்வும் ஞாயிற்றுக்கிழமை (12) வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபரும் பழைய மாணவர் சங்க தலைவருமாகிய கே.தவேந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், மட்டக்களப்பு கல்லடி ராமகிருஸ்ணமிஷன் மேலாளர் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மஹராஜ் மற்றும் கல்லடி டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலய பங்குத் தந்தை அருட் தந்தை லோரன்ஸ் லோகநாதன் அடிகளார் ஆகியோர் ஆன்மீக அதிதிகளாகவும், ரணில் 24 செயலணி தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் பிரதம அதிதியாகவும், முன்னாள் பாடசாலை அதிபர் வ.சொக்கலிங்கம் மற்றும் முன்னாள் பாடசாலை ஆசிரியர்கள் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்துள்ளனர்.

இந்நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள்,பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

15 பழைய மாணவ அணிகள் பங்கு கொண்ட 5 ஓவர்களை உள்ளடக்கியதான சுற்றுப் போட்டியின் இறுதி போட்டி நிகழ்வுகள் இடம் பெற்று, சாதனை மாணவர்கள் பாராட்டும், மாணவர்களை வழிப்படுத்திய ஆசிரியர்கள் கௌரவிப்பு நிகழ்வும் இடம் பெற்றது.

இச்சுற்றுத் தொடரில் முதலாம் இடத்தினை 2013 ஆம்ஆண்டு பிரிவு மாணவர்களின் ஈஸ்டன் கிங்பிஸ்ஸர் அணியும்,இரண்டாம் இடத்தினை 2019 ஆம் ஆண்டு பிரிவு மாணவர்களின் பைற்றிங் பஃல்கன்ஸ் அணியும் பெற்றுக் கொண்டன. அத்தோடு பழைய மாணவர்கள் பங்கு கொண்ட கயிறு இழுத்தல் போட்டி அனைவரதும் கவனத்தையும் ஈர்த்தன.

இதன்போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட ரணில் 24 செயலணித் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் உரையாற்றுகையில், எமது மாணவர்களில் பெரும்பாலானோர் கலைத்துறையைத் தெரிவு செய்வதனால், பட்டப் படிப்பை நிறைவு செய்து காந்திப் பூங்காவில் போராட்டம் நடத்தும் நிலை காணப்படுகின்றது.இந்நிலை எதிர்காலத்தில் மாற்றமடைய வேண்டும். வேலைவாய்ப்பை நாடி எமது பட்டப் படிப்புக்கள் மாற்றப்பட வேண்டும்- என்றார்.

தொடர்புடையசெய்திகள்

ரூ.40,000 இலஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு; ஆலையடிவேம்பு பிரதேச சபை உத்தியோகத்தர் கைது!
செய்திகள்

ரூ.40,000 இலஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு; ஆலையடிவேம்பு பிரதேச சபை உத்தியோகத்தர் கைது!

August 11, 2026
கடவுச்சீட்டு விநியோகத் தடை நீங்கியது; குடிவரவு திணைக்கள கணினி முறைமை வழமைக்கு திரும்பியது!
செய்திகள்

கடவுச்சீட்டு விநியோகத் தடை நீங்கியது; குடிவரவு திணைக்கள கணினி முறைமை வழமைக்கு திரும்பியது!

August 11, 2026
சிறைச்சாலைகளில் ஏற்பட்ட அமைதியின்மை; ரூ.255 மில்லியனுக்கும் அதிகமான சொத்து சேதம்!
செய்திகள்

சிறைச்சாலைகளில் ஏற்பட்ட அமைதியின்மை; ரூ.255 மில்லியனுக்கும் அதிகமான சொத்து சேதம்!

August 11, 2026
மாமாங்கேஸ்வரர் ஆலய “தேர்” திருவிழா; விண்ணைப் பிளந்த பல்லாயிரக்கணக்கானபக்தர்களின் அரோகரா கோஷம்!
செய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய “தேர்” திருவிழா; விண்ணைப் பிளந்த பல்லாயிரக்கணக்கானபக்தர்களின் அரோகரா கோஷம்!

August 11, 2026
குடிவரவு திணைக்கள கணினி அமைப்பு முடக்கம்; கடவுச்சீட்டு விநியோகத்தில் தற்காலிக தடங்கல்!
செய்திகள்

குடிவரவு திணைக்கள கணினி அமைப்பு முடக்கம்; கடவுச்சீட்டு விநியோகத்தில் தற்காலிக தடங்கல்!

August 11, 2026
நீதிபதிகளின் ஓய்வு வயது அதிகரிப்பு; ஜனாதிபதி – சட்டத்தரணிகள் சங்கம் நாளை முக்கிய சந்திப்பு!
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வு வயது அதிகரிப்பு; ஜனாதிபதி – சட்டத்தரணிகள் சங்கம் நாளை முக்கிய சந்திப்பு!

August 11, 2026
Next Post
ரயிலில் மோதுண்ட நபர்; மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதி!

ரயிலில் மோதுண்ட நபர்; மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு