Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் அரச பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் மீது தாக்குதல்!

மட்டக்களப்பில் அரச பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் மீது தாக்குதல்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு நகர் தனியார் பஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள பஸ்தரிப்பு நிலையத்தில் இன்று (15) இலங்கை போக்குவரத்து பஸ் சாரதி, நடத்துனர் மீது தனியார் போக்குவரத்து சாரதி மேற்கொண்ட தாக்குதலில் சாரதி, நடத்துனர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்.

குறித்த பஸ்தரிப்பு நிலையத்தில் இன்று காலை 11.10 மணியளவில் பயணிகளை ஏற்றுவதற்காக தனியார் பஸ் தரித்து நின்றுள்ளது. இதன் போது கல்முனையை நோக்கி பயணமாகவிருந்த மட்டக்களப்பு டிப்போவை சேர்ந்த அரச பேருந்து சாரதி, பஸ்தரிப்பு நிலையத்தில் பயணிகளை ஏற்றுவதற்கு தரித்து நிற்பதற்காக, அங்கு நின்ற தனியார் பஸ் சாரதியை பஸ்ஸை கொஞ்சம் முன்னோக்கி நகர்த்துமாறு கூறியுள்ளார்.

இதனையடுத்து தனியார் பஸ் சாரதி கோபமடைந்து பஸ்ஸில் இருந்து இறங்கி இலங்கை போக்குவரத்து பஸ் சாரதி, நடத்துனர் மீதும் தாக்குதலை மேற்கொண்டதில் சாரதி, நடத்துநர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதலின் பின்னர் தனியார் பஸ் சாரதி பஸ்வண்டியுடன் அங்கிருந்து தப்பி ஓடியதையடுத்து, இதில் காயமடைந்த அரச பேருந்து சாரதி, நடத்துனர் என்போர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதேசமயம் இந்த சம்பவத்தின் பின்னர் தனியார் பஸ் நடத்துனரை கைது செய்துள்ளதாகவும், தப்பி ஓடிய சாரதியை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

ஜாம்பியாவில் தேர்தல்; தற்போதைய ஜனாதிபதி மீண்டும் வெற்றி
உலக செய்திகள்

ஜாம்பியாவில் தேர்தல்; தற்போதைய ஜனாதிபதி மீண்டும் வெற்றி

August 19, 2026
வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக தினேஸ் கருணாநாயக்க கடமையேற்பு!
செய்திகள்

வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக தினேஸ் கருணாநாயக்க கடமையேற்பு!

August 19, 2026
மீண்டும் பொருளாதார நெருக்கடி; ரணிலின் கூற்றுக்கு அரசாங்கம் பதிலடி!
செய்திகள்

மீண்டும் பொருளாதார நெருக்கடி; ரணிலின் கூற்றுக்கு அரசாங்கம் பதிலடி!

August 19, 2026
படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க துறவியான அருட்பணி ஹெர்பர்ட் தன் ஆட்டுக்குட்டிக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்தவர்
காணொளிகள்

படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க துறவியான அருட்பணி ஹெர்பர்ட் தன் ஆட்டுக்குட்டிக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்தவர்

August 19, 2026
2030க்குள் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரம் 30 பில்லியன் டொலராக இலக்கு!
செய்திகள்

2030க்குள் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரம் 30 பில்லியன் டொலராக இலக்கு!

August 19, 2026
தமிழ் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சஜித் சந்திப்பு
செய்திகள்

தமிழ் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சஜித் சந்திப்பு

August 19, 2026
Next Post
பேச்சு- கேட்புத் திறனற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான புதிய தொழில்நுட்பம்!

பேச்சு- கேட்புத் திறனற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான புதிய தொழில்நுட்பம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு