எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (19) பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில், எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து இங்கு விரிவாக கவனம் செலுத்தப்பட்டன.
குறிப்பாக, இம்மாகாண மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் சமூக, பொருளாதார மற்றும் அபிவிருத்திப் பிரச்சினைகள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் ஏனைய பிரதேச மட்டப் பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவருக்கு விடயங்களை தெரிவித்தனர்.
அவ்வாறே, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் மிகவும் பரந்தளவில் முன்வைப்பது மற்றும் அவற்றுக்கான அவசியமான தலையீடுகளைச் செய்வது தொடர்பாகவும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இச்சந்திப்பில், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ எம்.எல்.எம். ஹிஸ்புல்லா, எம்.எஸ்.ஏ. வாஸீத், எம்.டி.எம். தாஹிர், துறைராசா ரவிகரன், இம்ரான் மஹ்ரூப், எம்.எஸ்.உதுமா லெப்பே, ரவூப் ஹக்கீம், டாக்கடர் இராமநாதன் அர்ச்சுனா, ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், காதர் மஸ்தான், செல்வம் அடைக்கலநாதன், சாணக்கியன் இராசமாணிக்கம், மனோ கணேசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.














