Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க துறவியான அருட்பணி ஹெர்பர்ட் தன் ஆட்டுக்குட்டிக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்தவர்

படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க துறவியான அருட்பணி ஹெர்பர்ட் தன் ஆட்டுக்குட்டிக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்தவர்

2 months ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க துறவியான அருட்பணி ஹெர்பர்ட் அடிகள் ஒரு நல்லாயனாய் தன் ஆட்டுக்குட்டிக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்த அந்த உன்னதமான தியாகம், மனிதநேயத்தின் மிக உயர்ந்த சிகரமாகும். என சென் மிக்கேல் தேசிய பாடசாலை பழையமாணவர்களின் இணைப்பாளர் ஜ.ஜே. சில்வெஸ்டர் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் ஏறாவூர் பகுதியில் வைத்து 1990 ஆம் ஆண்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அமெரிக்க துறவியான அருட்பணி ஹெர்பர்ட் அடிகளாரின் 36 வது நினைவேந்தல் மட்டக்களப்பு சென் மிக்கேல் தேசிய பாடசாலை பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் மாவட்ட யேசு துறவிகளின் தலைமையில் வாவிக்கரை பூங்காவுக்கு அருகில் அமைக்கப்ட்டிருக்கும் அன்னாரது தூபியில் அவருடன் கூடச் சென்று காணாலாம் ஆக்கப்பட்ட மாணவன் பெர்ட்ரம் ஆகியோரது திரவுருவபடத்திற்கு இன்று செவ்வாய்க்கிழமை (18) மலர் மாலை அணிவித்து 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.

இந்த நினைவேந்தலில் மாவட்டத்திலுள்ள தேவாலயங்களின் வணபிதாக்கள் மற்றும் பொதுமக்கள் அருட்பணி ஹெர்பர்ட் அடிகளுடன் கூடச் சென்று காணாலம் ஆக்கப்பட்ட மாணவன் பெர்ட்ரம் உறவினர்கள் என பலர் கலந்து கொண்டனர். இதன்போது பாடசாலையின் பழைய மாணவன் கிரிஸ்டி இவ்வாறு தெரிவித்தார்

“1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமைதிமையும் நீதியையும் தேடிச்சென்ற பாதையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட இயேசு சபைத் துறவி அருட்பணி ஹெர்பர்ட் அடிகளார் (சுநஎ. குச. நுரபநநெ ர்நசடிநசவ ளுது) அவர்களின் நினைவை நெஞ்சில் ஏந்தி நிற்கும் இவ்வேளையில், மனித உரிமைகளுக்காகவும் எளிய மக்களின் விடியலுக்காகவும் குரல்கொடுத்த ஒரு புனிதமான ஆன்மாமவ நாம் நன்றியோடும் கண்ணீரோடும் நினைவுகூர்கின்றோம்.

அருட்பணி ஹர்பர்ட் அடிகளார் வெறும் சமைப்பணி ஆற்றிய ஒரு துறவி மட்டுமல்ல் வன்முறையும் அச்சமும் சூழ்ந்திருந்த கொந்தளிப்பான கால கட்டத்தில், ஒடுக்கப்பட்ட மக்களின் துன்பங்களுக்குத் தோள்கொடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் குரலாக விளங்கிய ஒரு நீதியின் காவலர்.

இருள் சூழ்ந்த காலங்களில் வெளிச்சத்தின் சாட்சியாகவும், அமைதியின் தூதுவராகவும் திகழ்ந்த அவர், அன்பையும் நீதிமையும் நிலைநிறுத்தத் தம் வாழ்வையே அர்ப்பணிக்கத் துணிந்தவர்.

‘அன்பிலும் சேவையிலும் பிறருக்கென வாழ்வதே உண்மiமான கிறிஸ்தவ வாழ்வு’ என்பதைத் தம்முடைய இறைப்பணியிலும் சமூகப் பணியிலும் ஆழமாக வாழ்ந்து காட்டியவர் அடிகளார். வன்முறையும் அநீதியும் தலைவிரித்தாடிய சூழலிலும், பயமின்றி எளிய மக்களோடு மக்களாய் நின்று, அமைதிப் பாலங்களை அமைக்கத் தம் வாழ் நாளை அர்ப்பணித்தார்.

1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அந்தப் பயங்கரமான நாளில், ‘நண்பனுக்காகத் தன் உயிரையே பயணம் வைப்பதை விட மேலான அன்பு எவரிடமும் இல்லல’ என்ற இறைவார்த்தையைத் தம் சொந்த வாழ்க்கையில் மெய்பித்துகாட்டினார்.

தம்மோடு மோட்டார் சைக்கிளில் பயணித்த அன்பு மாணவன் பெர்ட்ரம் என்பவரை ஆயுதம் தாங்கிய கும்பல் பறித்தெடுத்துச் செல்ல முயன்றபோது, தன் மாணவனைக் கைவிட மறுத்து, அவனுக்காகத் துணிச்சலோடு போராடினார். தன் மாணவனை விட்டுப்பிரியாத அந்தப் புனிதமான முயற்சியிலே அடிகளார் அவரோடு சேர்த்துப் பறித்துச் செல்லப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டார்.

ஒரு நல்லாயனாய் ஆட்டுக்குட்டிக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்த அந்த உன்னதமான தியாகம், மனிதநேயத்தின் மிக உயர்ந்த சிகரமாகும். அடிகளாரும் மாணவன பெர்ட்ரம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டு இன்று 36 ஆண்டுகள் உருண்டோடிவிட்ட போதிலும், அவர்கள் ஏற்றிவைத்த அந்த அன்பின் சுடரும் தியாகத்தின் வெளிச்சமும் நம் இதயங்களில் இன்னும் அணையாமல் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன.

அவருடைய இந்த அர்ப்பணிப்பு நமக்கு உணர்த்தும்செய்தி ஒன்று ‘நீதிக்காகவும், மனிதநேயத்திற்காகவும், பிறரைக் காப்பதற்காகவும் செய்யும் தியாகப் பணி எந்தவோரு வன்முறையினாலும் நசுக்கப்பட முடியாது.’
இன்று நாம் கூடிநிற்கும் இந்த 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, வெறும் துக்கத்தைப் பகிர்ந்து கொள்ளும் நிகழ்வு மட்டுமல்ல அடிகளார் விட்டுச்சென்ற இணைற்ற அர்ப்பணிப்பு, தைரியம்; மற்றும் சமூக நீதி என்ற உன்னத இலட்சியங்களை மீளவும் நமது மனங்களில் உறுதிமொழியாக ஏற்றுக்கொள்ளும் ஒரு புனிதமான தருணமாகும்.

அருட்பணி ஹர்பர்ட் அடிகளார் மற்றும் மாணவன்; பெர்ட்ரம் ஆகியோரின் தியாகத்தையும், அவர்கள் வாழ்ந்து காட்டிய மனிதநேய விழுமியங்க ளையும் நெஞ்சில் ஏந்தி, நீதியும் அமைதியும் தவழும் ஒரு சமூகத்தைப் படைக்க நாம் அனனவரும் கரங்கோர்ப்போம்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

”மட்டு திராய்மடுவில் பொலிசாரின் ஆதரவுடன் கசிப்பு விற்பனை!”; பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
செய்திகள்

”மட்டு திராய்மடுவில் பொலிசாரின் ஆதரவுடன் கசிப்பு விற்பனை!”; பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

October 4, 2026
இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்த 9 இந்திய மீனவர்கள் கைது
செய்திகள்

இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்த 9 இந்திய மீனவர்கள் கைது

October 4, 2026
கல்முனையில் புதிய தீவிரவாதத் தலைமை?; சம்பிக்க ரணவக்கவிடம் விசாரணை நடத்தக் கோரிக்கை
செய்திகள்

கல்முனையில் புதிய தீவிரவாதத் தலைமை?; சம்பிக்க ரணவக்கவிடம் விசாரணை நடத்தக் கோரிக்கை

October 4, 2026
20% கட்டண உயர்வை எதிர்பார்க்கும் எரிபொருள் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம்
செய்திகள்

20% கட்டண உயர்வை எதிர்பார்க்கும் எரிபொருள் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம்

October 4, 2026
யாழில் ஹெட்செட் அணிந்து தண்டவாளத்தில் படுத்திருந்தவர் – கை, கால்களை இழந்த சோகம்
செய்திகள்

யாழில் ஹெட்செட் அணிந்து தண்டவாளத்தில் படுத்திருந்தவர் – கை, கால்களை இழந்த சோகம்

October 4, 2026
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு அழைத்துவரப்பட்டார் ஞானசார தேரர்
செய்திகள்

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு அழைத்துவரப்பட்டார் ஞானசார தேரர்

October 4, 2026
Next Post
மீண்டும் பொருளாதார நெருக்கடி; ரணிலின் கூற்றுக்கு அரசாங்கம் பதிலடி!

மீண்டும் பொருளாதார நெருக்கடி; ரணிலின் கூற்றுக்கு அரசாங்கம் பதிலடி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.