ஈரானிய தூதுவர் ஏ.டெல்கோஷ் தாக்கி விபத்திற்குள்ளாக்கிய கொழும்பு வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் சிக்கிய தூதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு 02, முத்தையா வீதி பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றின் வாகன நிறுத்துமிடத்திற்குள் தூதுவர் பிரவேசித்த போது, மற்றொரு காரின் சாரதியுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது குறித்த நபர் தூதுவரைத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் பின்னர் சம்பவ இடத்திற்குப் பிரவேசித்த பொலிஸார், கொழும்பு 07, வோட் பிளேஸில் வசிக்கும் 33 வயதுடைய வர்த்தகரைக் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் சந்தேக நபர், கொழும்பு புதுக்கடை இலக்கம் 02 நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், நாளை (20) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.