அகில இலங்கை சமாதான நீதவான் பதவிக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு, கல்குடா ஐக்கிய தேசிய கட்சி அலுவலகம் ஒட்டமாவடியில் இன்று (19) நடைபெற்றது.
அதன் அடிப்படையில் கல்குடா ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் கலாநிதி முசாமில் தமது கட்சி அலுவலகத்தில் வைத்து மூன்று பேருக்கு இந்த நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார்.
மேற்படி பிரசேத்தில் நீண்டகாலமாக சமாதான நீதவான்களின் சேவை பற்றாக் குறையாக இருப்பது தொடர்பாக நீதி சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியல் மறு சீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவிடம் அமைப்பாளரினால் விடுத்த வேண்டுகோளினையடுத்து இவ் நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் இந்த நியமனக் கடிதங்களை வழங்க நடவடிக்கை எடுத்த நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ அகியோர்களுக்கும் தமது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அமைப்பாளர் மேலும் தெரிவித்தார்.