Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உடல்களை விட்டுச் செல்லும் உறவினர்கள்; கனடாவில் இறுதிச் சடங்குகளுக்கான செலவுகள் அதிகரிப்பு!

உடல்களை விட்டுச் செல்லும் உறவினர்கள்; கனடாவில் இறுதிச் சடங்குகளுக்கான செலவுகள் அதிகரிப்பு!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

கனடாவின் சில பிராந்தியங்களில் கடந்த சில ஆண்டுகளாக இறந்தவர்களின் உடல்கள் சொந்தங்களால் கைப்பற்றப்படாமல் அரசாங்கமே பாதுகாக்கும் நிலைக்கு காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இறுதிச்சடங்குகளுக்கான செலவு அதிகரித்துள்ளதன் காரணமாகவே, உறவினர்களின் உடல்களை கைப்பற்ற சொந்தங்கள் மறுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1998ல் 6,000 கனேடிய டொலராக இருந்த இறுதிச்சடங்கு செலவு தற்போது 8,800 கனேடிய டொலரை எட்டியுள்ளது. கனடாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணமான ஒன்ராறியோவில் கைப்பற்றப்படாத உடல்களின் எண்ணிக்கை 2013ல் இது 242 என இருந்துள்ள நிலையில் 2023ல் 1183 என அதிகரித்துள்ளது.

இந்த நிலை அதிகரித்துவருவதால், குறைந்தது ஒரு பிராந்தியமாவது, புதிதாக பிணவறை கட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. உறவினர்களால் தங்கள் சொந்தங்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டாலும், பல்வேறு காரணங்களால் கைப்பற்றப்பட்டாமலே உள்ளதுடன் இதற்கு பணம் தான் 24 சதவிகித காரணமாக உள்ளது.

இதனால், ஒன்ராறியோ நிர்வாகம் தற்போது புதிய திட்டமொன்றை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது. அதாவது, 24 மணி நேரத்தில் ஒரு சடலம் கைப்பற்றப்படாமல் போனால், உற்றார் உறவினர்களை கண்டுபிடித்து, அவர்களின் நிலை அறிந்துகொண்டு, உள்ளூர் நகரசபை நிர்வாகம் எளிய முறையில் இறுதிச்சடங்குகளை முன்னெடுக்கும்.

மிட் டவுன் ரொறன்ரோவில் கல்லறையை திறப்பது மற்றும் மூடுவது, இறுதிச்சடங்குகள், வரி மற்றும் பிறப்பொருட்களுக்கான செலவுகள் இல்லாமல் கல்லறை ஒன்றிற்கு செலவு 34,000 டொலர் வரையில் செலவாகின்றது.

இறுதிச்சடங்குகளுக்கு மட்டும் தற்போது 2,000 முதல் 12,000 டொலர் வரையில் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதனாலேயே, சமீப ஆண்டுகளில் வசதி வாய்ப்புகள் இல்லாத மக்கள் தங்கள் உறவினர்களின் உடல்களை கைப்பற்றி இறுதிச்சடங்குகளை நடத்த முடியாமல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

கல்முனை ஹிஜாப் விவகாரம் முறைப்பாடாய் தமக்கு கிடைக்கவில்லை என அரசு அறிவிப்பு
செய்திகள்

கல்முனை ஹிஜாப் விவகாரம் முறைப்பாடாய் தமக்கு கிடைக்கவில்லை என அரசு அறிவிப்பு

August 11, 2026
தென்கிழக்குப் பல்கலை பட்டமளிப்பு விழாவில் தொலைந்த தங்க நகையை உரிய மாணவியிடம் மீள ஒப்படைத்த மாணவிக்கு பாராட்டு
செய்திகள்

தென்கிழக்குப் பல்கலை பட்டமளிப்பு விழாவில் தொலைந்த தங்க நகையை உரிய மாணவியிடம் மீள ஒப்படைத்த மாணவிக்கு பாராட்டு

August 11, 2026
மாமாங்கம் தேர் திருவிழாவில் பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி அறுப்பு
செய்திகள்

மாமாங்கம் தேர் திருவிழாவில் பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி அறுப்பு

August 11, 2026
கந்தளாய் குளத்தில் சட்டவிரோத மீன்பிடி; 4,000 மீற்றர் நைலோன் வலைகள் பறிமுதல்
செய்திகள்

கந்தளாய் குளத்தில் சட்டவிரோத மீன்பிடி; 4,000 மீற்றர் நைலோன் வலைகள் பறிமுதல்

August 11, 2026
சிரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை!
செய்திகள்

சிரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை!

August 11, 2026
போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையா?
செய்திகள்

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையா?

August 11, 2026
Next Post
இலங்கையில் ஸ்டார் லிங்க் இணையசேவை; நாட்டிற்கு வருகிறார் மஸ்க்!

இலங்கையில் ஸ்டார் லிங்க் இணையசேவை; நாட்டிற்கு வருகிறார் மஸ்க்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு