Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சூடு பிடிக்கும் அரசியல் களம்!

சூடு பிடிக்கும் அரசியல் களம்!

2 years ago
in அரசியல், செய்திகள்

அதிபர்த் தேர்தலை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் நடத்துவதற்கு அரசு அவதானம் செலுத்தியுள்ள நிலையில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு மீண்டும் ஆதரவளிக்கும் வகையில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக பரந்துபட்ட கூட்டணியின் கீழ் பொது வேட்பாளராகப் போட்டியிட ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார் என்று அரசின் உயர்மட்டத் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

அதிபர்த் தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறும் என்று பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டன. மே மாதம் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்றும் அந்தத் தகவல்களில் கூறப்பட்டது.

இந்தத் தகவல்களுக்கு ஆளும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவினர் பதிலளிக்கையில், நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டால் எவ்வாறு சர்வதேச நாணய நிதியத்துடனான நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுப்பது எனக் கேள்வியெழுப்பியிருந்தனர்.

இவ்வாறானதொரு நிலையிலேயே அதிபர்த் தேர்தலுக்கான திகதி தொடர்பில் அரசின் முக்கியஸ்தர் ஒருவர் தகவல் கூறினார். இதன் பிரகாரம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் அதிபர்த் தேர்தலை நடத்துவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என்றும், பெரும்பாலும் ஒக்டோபர் 5ஆம் திகதி தேர்தல் இடம்பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசமைப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அதிபர்த் தேர்தலுக்கான சட்ட விதிகளின் பிரகாரம் 2024ஆம் ஆண்டின் அதிபர்த் தேர்தலுக்கான வாக்கெடுப்பு எதிர்வரும் செப்டெம்பர் 17ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 16 ஆம் திகதிக்கு இடைப்பட்ட சனிக்கிழமை ஒன்றில் நடத்தப்பட வேண்டும்.

இதன் அடிப்படையிலேயே ஒக்டோபர் மாதத்தில் முதல் வாரம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அதிபர்த் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் பொதுஜன பெரமுனவில் சாதகமான பேச்சுகள் இடம்பெற்றுள்ளன.

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்றக் குழு அதிபர் ரணிலை ஆதரிக்கின்ற நிலையில், அந்தக் கட்சியின் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளின் சம்மேளனத்தினர் அதிபர் ரணிலை நேரில் சந்தித்து ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்தச் சந்திப்பு பசில் ராஜபக்சவின் ஆலோசனையுடன் இடம்பெற்ற ஒன்றாகும். மறுபுறம் ஐக்கிய தேசியக் கட்சியும் பல அரசியல் கட்சிகளுடனும் பேச்சுகளை முன்னெடுத்து இணக்கப்பாடுகளை எட்டியுள்ளது.

அத்துடன் அநுர பிரியதர்ஷன யாப்பா தலைமையிலான புதிய அரசியல் கூட்டணியும் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

கல்முனை ஹிஜாப் விவகாரம் முறைப்பாடாய் தமக்கு கிடைக்கவில்லை என அரசு அறிவிப்பு
செய்திகள்

கல்முனை ஹிஜாப் விவகாரம் முறைப்பாடாய் தமக்கு கிடைக்கவில்லை என அரசு அறிவிப்பு

August 11, 2026
தென்கிழக்குப் பல்கலை பட்டமளிப்பு விழாவில் தொலைந்த தங்க நகையை உரிய மாணவியிடம் மீள ஒப்படைத்த மாணவிக்கு பாராட்டு
செய்திகள்

தென்கிழக்குப் பல்கலை பட்டமளிப்பு விழாவில் தொலைந்த தங்க நகையை உரிய மாணவியிடம் மீள ஒப்படைத்த மாணவிக்கு பாராட்டு

August 11, 2026
மாமாங்கம் தேர் திருவிழாவில் பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி அறுப்பு
செய்திகள்

மாமாங்கம் தேர் திருவிழாவில் பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி அறுப்பு

August 11, 2026
கந்தளாய் குளத்தில் சட்டவிரோத மீன்பிடி; 4,000 மீற்றர் நைலோன் வலைகள் பறிமுதல்
செய்திகள்

கந்தளாய் குளத்தில் சட்டவிரோத மீன்பிடி; 4,000 மீற்றர் நைலோன் வலைகள் பறிமுதல்

August 11, 2026
சிரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை!
செய்திகள்

சிரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை!

August 11, 2026
போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையா?
செய்திகள்

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையா?

August 11, 2026
Next Post
ஆசிட் தாக்குதலுக்கு இலக்கான பெண் உயிரிழப்பு!

ஆசிட் தாக்குதலுக்கு இலக்கான பெண் உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.