பாக்குநீரினை நீந்திக்கடந்து சாதனை படைத்துள்ளார் புனித மிக்கேல் கல்லூரி மாணவன் தேவேந்திரன் மதுஷிகன்.
தனுஷ் கோடியிலிருந்து இலங்கைத் தலைமன்னார் வரையிலான 32 கிலோமீட்டர் நீளமுடைய கடலை சுமார் 12 மணித்தியாலங்களுக்கு அதிகமான நேரத்தில் நீந்திக்கடந்து சாதனை படைத்துள்ளார்.
இவர் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் பன்னிரண்டு வயதில் தனது நீச்சல் பயிற்சியை ஆரம்பித்து மாகாண மற்றும் திறந்த மட்ட நீச்சல் போட்டிகளில் பங்கேற்று வெற்றியீட்டியுள்ளதுடன், ஜனாதிபதி சாரணர் விருதுவென்றவருமாவார்.








