வருடாந்த கிராமிய விளையாட்டு விழா. மட்டக்களப்பு வந்தாறுமூலை டைமண்ட் விளையாட்டு கழகத்தினர் மற்றும் வந்தாறுமூலை பொதுமக்கள் இணைந்து நடத்தப்படுகின்ற மாபெரும் வருடாந்த கிராமிய விளையாட்டு விழா இன்று சனிக்கிழமை காலை ஆண்களுக்கான நெடுந்தூர மரதன் ஓட்ட நிகழ்வு நடைபெற்றது.
இவ் நிகழ்வானது சனிக்கிழமை (25) காலை வேளையில் வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக் கழகத்துக்கு முன்பாக ஆரம்பமாகி பிரதான வீதி ஊடாக சந்திவெளி பிள்ளையார் ஆலயத்தின் முன்பாக திரும்பி மீண்டும் பிரதான வீதி ஊடாக வந்தாறுமூலை அம்பலத்தடி சாந்தி உழவர் சிலை வளைவில் திரும்பி உப்போடை வீதியை நோக்கி சென்று டைமண்ட் விளையாட்டு கழக மைதானத்தில் இவ் மரதன் ஓட்டப் போட்டி நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.
இந்த போட்டி நிகழ்வில் 15க்கு மேற்பட்ட போட்டியாளர்கள் பங்குபற்றி இருந்த போதிலும் குறைந்த அளவான வீரர்களே இறுதிவரை குறிப்பிட்ட தூரத்தினை ஓடி நிறைவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
போட்டியில் முதலாம் இடத்தினை மாவடிவேம்பை சேர்ந்த பாலசிங்கம் தசரதனும் இரண்டாவது இடத்தினை கொம்மாதுறையைச் சேர்ந்த பரசுராமன் வினோராஜ் அவர்களும் மூன்றாம் இடத்தினை வந்தாறுமூலையினை சேர்ந்த ரகுநாதன் ஜிதன் அவர்களும் வெற்றிவாகை சூடிக்கொண்டனர்.
ஆண்களுக்கான நெடுந்தூர மரதன் ஓட்டப் போட்டி நிகழ்வில் வந்தாறுமூலை டைமண்ட் விளையாட்டு கழகத்தின் மூத்த உறுப்பினர்களும், விளையாட்டு கழக உறுப்பினர்கள் மற்றும் கிராமப் பெரியார்கள், இளைஞர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்து இருந்தனர்.
அத்தோடு இந்த மரதன் ஓட்டப் போட்டி நிகழ்வுக்காக சுகாதார வைத்திய பாதுகாப்புக் கடமைகளை மட்டக்களப்பு பயனியர் வைத்தியசாலை நிர்வாகத்தினர் ஆற்றியதோடு,.வீதி பாதுகாப்பு கடமைகளை ஏறாவூர் பொலிஸ் நிலையத்திலிருந்து போக்குவரத்து பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
அதுமட்டுமல்லாமல் நாளை காலை ஆண்களுக்கான நெடுந்தூர துவிச்சக்கர வண்டி ஓட்ட நிகழ்வு ஒன்றும் நடைபெற உள்ளது. இப்போட்டி நிகழ்வானது வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கு முன்பாக ஆரம்பமாகி பிரதான வீதி ஊடாக வாழைச்சேனை சென்று வாழைச்சேனையிலிருந்து மீண்டும் பிரதான வீதி ஊடாக திரும்பி மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக திரும்பி மீண்டும் வந்தாறுமூலை அம்பலத்தடி சந்தையில் நிறைவடையும் என்பதை சகல வீரர்களுக்கும் தெரிவித்துக் கொள்கின்றனர்.