முல்லைத்தீவு முள்ளியவளை காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட பகுதி ஒன்றில் 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் கர்ப்பம் தரித்த சந்தேகத்தில் கடை உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரை நேற்று (28) அன்று முள்ளியவளை காவல்துறையினர் கைதுசெய்துள்ளார்கள்.
முள்ளியவளை காவல்பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/05/image-1259.png)
குறித்த மாணவி நாள்தோறும் குறித்த கடைக்கு சென்று வந்துள்ள நிலையில் உடல் சுகயீனம் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் சிறுமியின் சட்டவைத்திய விசாரணையினை தொடர்ந்து குறித்த கடைக்காரர் சந்தேகத்தின் பேரில் முள்ளியவளை காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.