Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 2 ஆம் திகதி வரை மழை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 2 ஆம் திகதி வரை மழை

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைக்கும் மழை எதிர்வரும் 02.05.2025 வரை தொடரும் வாய்ப்புள்ளதாக யாழ். பல்கலைக்கழக புவியியற்துறை தலைவர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

இந்த மழை மேற்காவுகைச் செயற்பாட்டினால் உருவாகும் மழையாகும். அதனால் நண்பகல் வரை கடுமையான வெப்பநிலையுடன் கூடிய வானிலை நிலவும். பின்னர் பிற்பகல் 2.00 மணியளவில் மழை கிடைக்கும்.

இது மேற்காவுகைச் செயற்பாட்டினால் உருவாகும் மழை என்பதனால் இது இடி மின்னல் நிகழ்வுகளோடு கூடிய மழையாகவே கிடைக்கும். அதிலும் இந்த இடி மின்னல் நிகழ்வுகளின் போதான மின்னேற்றம் முகில்களுக்கும் புவி மேற்பரப்பிற்குமிடையில் பரிமாற்றப் படுவதனால் குத்தான இடி மின்னலாகவே இருக்கும். இடி மின்னல் வகைகளில் இதுவே அதிக சேதத்தை ஏற்படுத்த வல்லன. எனவே இது தொடர்பாக மக்கள் அவதானமாக இருப்பது அவசியம்.

அதேவேளை எதிர்வரும் 10 ஆம் திகதி வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. பொதுவாக தமிழுக்கு சித்திரை 28 என்பது சித்திரைக் குழப்பத்தின் மைய நாளாகக் கருதப்படும். சித்திரை ஒரு சிறு மாரி என்ற கருத்தும் எம் மத்தியில் உள்ளது. எதிர்வரும் 10 ஆம் திகதி உருவாகும் தாழமுக்கம் இவ்வாண்டின் சித்திரைத் குழப்பத்தின் தோற்றுவாயாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தாழமுக்கம் எமது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கணிசமான அளவு மழையைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சித்திரைக் குழப்பமே தென்மேற்குப் பருவக்காற்று உடைவுக்கும் காரணமாக அமைவதுண்டு. அந்த வகையில் இவ்வாண்டு தென் மேற்கு பருவமழை மே மாதத்தின் பிற்பகுதியில் உருவாகும் வாய்ப்புள்ளது.

அதே வேளை இவ்வாண்டின் காண்டாவனம்( அக்கினி நட்சத்திரம்) எதிர்வரும் 04.05.2025 அன்று ஆரம்பித்து 28.05.2025 அன்று நிறைவடைகிறது எனவும் தெரிவித்துள்ளார்

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அம்பாறை கடற்கரைகளில் அதிகரிக்கும் சட்டவிரோத கடல்மண் கடத்தல்
செய்திகள்

அம்பாறை கடற்கரைகளில் அதிகரிக்கும் சட்டவிரோத கடல்மண் கடத்தல்

September 27, 2026
மின்சாரக்கட்டணத்தை குறைப்பதற்கு தற்போதைய சூழல் உகந்ததல்ல; எரிசக்தி அமைச்சர்
செய்திகள்

மின்சாரக்கட்டணத்தை குறைப்பதற்கு தற்போதைய சூழல் உகந்ததல்ல; எரிசக்தி அமைச்சர்

September 27, 2026
சிலையை உடைக்கலாம்; திலீபனின் நினைவுகளை அழிக்க முடியாது – டி.ராஜேந்தர்
செய்திகள்

சிலையை உடைக்கலாம்; திலீபனின் நினைவுகளை அழிக்க முடியாது – டி.ராஜேந்தர்

September 27, 2026
அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் குழுவின் இரண்டாம் கட்ட நீச்சல் பயிற்சி தீவிரம்
செய்திகள்

அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் குழுவின் இரண்டாம் கட்ட நீச்சல் பயிற்சி தீவிரம்

September 27, 2026
பௌர்ணமி தினத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்றவர்கள்
செய்திகள்

பௌர்ணமி தினத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்றவர்கள்

September 27, 2026
ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக எமது கட்டுப்பாட்டில் வந்துவிட்டது; ட்ரம்ப் அறிவிப்பு
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக எமது கட்டுப்பாட்டில் வந்துவிட்டது; ட்ரம்ப் அறிவிப்பு

September 27, 2026
Next Post
கல்முனையில் மின் ஒழுக்கினால் தீப்பற்றி வீடு சேதம்

கல்முனையில் மின் ஒழுக்கினால் தீப்பற்றி வீடு சேதம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு